For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரவாயில்லையே! இந்தியாவில் ஊழல் குறையுதாமே!

Google Oneindia Tamil News

டெல்லி: ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் 38 புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா 92வது இடத்திலிருந்து 85வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

அந்த வகையில் சீனாவை விட இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.

ஜெர்மனியின் பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்" என்ற சர்வதேச அமைப்பு ஆண்டு தோறும் ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

India Ranked Less Corrupt Than China for the First Time in 18 Years

சர்வதேச அளவில் நடைபெறும் ஊழல் குற்றங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் ஊழல் குறைவான 175 நாடுகளின் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

இந்தப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் கடந்த ஆண்டு 36 புள்ளிகளுடன் 92வது இடத்தில் இருந்த இந்தியா 2 புள்ளிகளை கூடுதலாகப் பெற்று 38 புள்ளிகளுடன் 85வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அண்டை நாடுகளை பொருத்தவரை கடந்த ஆண்டை விட சீனா 4 புள்ளிகள் குறைந்து 100 ஆவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. பாகிஸ்தானும் நேபாளமும் 126 ஆவது இடத்தில் உள்ளன. வங்கதேசம் 145 ஆவது இடத்தையும் பூடான் 30 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. ஆப்கானிஸ்தானுக்கு 172 ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் 92 புள்ளிகளை பிடித்துள்ள டென்மார்க் ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. நியூசிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகள் முறையே 2,3,4,5 ஆம் இடத்தை பிடித்துள்ளன.

உலக பொருளாதார அமைப்பு மற்றும் உலக நீதித் திட்டம் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்தியாவுக்கு கூடுதல் புள்ளிகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் எஸ்.கே. அகர்வால் கூறுகையில் "நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பெரும்பான்மை பலத்துடன் இந்தியாவில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. கிடப்பில் உள்ள ஊழலுக்கு எதிரான அனைத்து மசோதாக்களையும் தற்போதுள்ள அரசு நிறைவேற்றக்கூடிய நேரம் இதுவாகும்" என்றார்.

English summary
Transparency International’s annual survey ranked India as less corrupt than China for the first time in 18 years as a nationwide outcry against corruption helped lift global perceptions of the South Asian nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X