ரஜினி பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாகும்.. சொல்கிறார் ராம்கோபால் வர்மா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினி பிரதமரா?- வீடியோ

  மும்பை: ரஜினி பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாகும் என பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

  பிரபல இந்தி பட இயக்குனர் ராம்கோபால் வர்மா, எதையாவது கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர்.

  அவ்வப்போது அரசையும் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அரசியல் குறித்த கருத்து ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

  இந்தியா அமெரிக்காவாகும்

  அதாவது ரஜினிகாந்த் பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார். அப்போது இந்தியா 2.0 லிருந்து 200.0 என மாறும் என்றும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

  ஆன்மிக அரசியல்

  ஆன்மிக அரசியல்

  ரஜினி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

  வரவேற்பும் எதிர்ப்பும்

  வரவேற்பும் எதிர்ப்பும்

  வரும் சட்டசபை தேர்தலில் தனது கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் ரஜினிகாந்த் அறிவித்தார். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது.

  அமோக வெற்றி பெறுவார்

  அமோக வெற்றி பெறுவார்

  இதைத்தொடர்ந்து ஆர்எம் வீரப்பன் மற்றும் கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். அப்போது தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினி அமோக வெற்றி பெறுவார் என கருத்து தெரிவித்திருந்தார் ராம்கோபால் வர்மா.

  ராம்கோபால் வர்மா

  ராம்கோபால் வர்மா

  இந்நிலையில் ரஜினி பிரதமராக வேண்டும் என தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பும் வரவேற்பும் கிளம்பியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Ramgopal varma has said that says that India will become as powerful as America when superstar Rajinikanth becomes the Prime Minister of the country.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற