For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

15,000 அடி உயரத்தில் சிக்கிய அமெரிக்க பாரா கிளைடிங் வீரரை காத்த இந்திய ராணுவம்.. திக், திக் வீடியோ

ஹெலிகாப்டரில் விரைந்த இந்திய ராணுவ வீரர்கள், அமெரிக்கர் பாறையில் மாட்டிக் கொண்டதை கண்டுபிடித்தனர். அவரை பத்திரமாக மீட்ட ராணுவத்தினர், முதல் உதவி சிகிச்சைகளுக்கு பிறகு, சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செ

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாரா கிளைடிங் பயிற்சியின் போது 15,000 அடி உயரத்தில் உள்ள ஒரு பாறையில் சிக்கிக்கொண்ட அமெரிக்கர் ஒருவரை இந்திய ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கங்கரா மாவட்டத்தில் பைஜ்நாத் பகுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த பேரி ராபர்ட்ஸ் என்பவர் பாரா கிளைடிங் பயிற்சி மேற்கொண்டார். அப்போது, உயரத்தில் பறந்த பாரா கிளைடர் எதிர்பாராத விதமாக, 15,000 அடி உயரத்தில் இருந்த பாறை ஒன்றில் சிக்கிக்கொண்டதாம்.

Indian Army rescues US paraglider stuck at 15,000 feet in Himachal

இதனால் ராபர்ட்ஸ் அந்தரத்தில் தொங்கியபடியே இருந்துள்ளார். உடன் வந்தவர்கள், ராபர்ட்ஸை காணாவில்லை என்று தேடியலைந்தனர். அவர் கிடைக்காததால், ராணுவத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தேடுதல் வேட்டையை முடுக்கியது இந்திய ராணுவம். ஹெலிகாப்டரில் விரைந்த இந்திய ராணுவ வீரர்கள், அமெரிக்கர் பாறையில் மாட்டிக் கொண்டதை கண்டுபிடித்தனர். அவரை பத்திரமாக மீட்ட ராணுவத்தினர், முதல் உதவி சிகிச்சைகளுக்கு பிறகு, சிகிச்சைக்காக டெல்லி கொண்டு சென்றனர்.

English summary
The Indian Army on Wednesday rescued an American citizen, who was badly injured during paragliding in Himachal Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X