For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“ஹையோ பாவம்! அந்த 19 நிமிடமாவது ஒதுக்குகிறார்களே! வேறென்ன சொல்ல?!”

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ஆண்கள் தங்களின் ஒரு நாளில் 1000 நிமிடங்களை வீட்டு வேலைக்காக ஒதுக்குகிறார்கள்.

இது உண்மை என்று நீங்கள் எண்ணினால் அது மிகவும் தவறான நம்பிக்கை.

அப்படி ஒரு சவுக்கடி ஆராய்ச்சி முடிவை பெண்கள் தின மாதத்தில் வெளியிட்டுள்ளது ஒரு நிறுவனம்.

அடுப்படியில் வேகும் பெண்கள்:

அடுப்படியில் வேகும் பெண்கள்:

பெண்கள் தினமும் அடிமையாக சமையலறையில் அடுப்பில் வெந்து தணியும் போது,குழந்தைகளை கவனித்துகொள்ளும் போது, கணவரும்,தந்தையும்,சகோதரனும் மிக தீவிரமாக கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

வெளியே வந்த பூனைக்குட்டி:

வெளியே வந்த பூனைக்குட்டி:

இந்த பூனைக்குட்டி இப்போது உலகம் முழுவதும் வெளியே வந்துவிட்டது. ஓ.இ.சி.டி நிகழ்த்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில் இந்திய ஆண்கள்தான் நம்பத்தகாத வகையில் உலகிலேயே மிக குறைவாக வெறும் 19 நிமிடங்களை வீட்டு வேலைக்காக ஒதுக்குகிறார்கள்.மற்ற மூன்று ஆசிய நாடுகளில் ஜப்பான் 24 நிமிடமும், கொரியா 21 நிமிடமும், சைனா 48 நிமிடமும் பெற்று இடம் பிடித்துள்ளன.

”அப்படிபட்ட” ஆண்கள் இங்கு இல்லை:

”அப்படிபட்ட” ஆண்கள் இங்கு இல்லை:

அப்போ எங்குதான் வீட்டு வேலையை ஒழுங்காக செய்யும் ஆண்கள் இருக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?சோல்வேனியா, டென்மார்க், எஸ்டோனியாவில்தான் ஆண்கள் தினமும் 114 நிமிடங்களை வீட்டு வேலைக்காக ஒதுக்குகிறார்கள்.

ஒரு நாளில் 298 நிமிடங்கள்:

ஒரு நாளில் 298 நிமிடங்கள்:

இது இந்திய குடும்பங்களை பொறுத்த வரை ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாக உள்ளது.கணவன்,மனைவி இருவருமே வேலைக்கு போகும் நிலையிலும் பெண்களே வீட்டு வேலைகளையும் சமாளிக்க வேண்டியுள்ளது.இந்த ஆய்வின் படி,இந்திய பெண்கள் ஒரு நாளில் 298 நிமிடங்களை தினமும் ஒதுக்குகிறார்கள் சமையல்,துணி துவைத்தல்,குழந்தைகள் பராமரிப்பு,வீட்டு நிர்வாகம் போன்றவைகளுக்காக.

ஓய்வே இல்லாத பெண்கள்:

ஓய்வே இல்லாத பெண்கள்:

அவர்களுடைய ஓய்வு நேரமே மொத்தமாக 221 நிமிடங்கள்தான் ஆண்களின் ஓய்வு நேரத்துடன் ஒப்பிடும் போது.

உண்மையான “குடி”மகன்கள்:

உண்மையான “குடி”மகன்கள்:

அப்போ "மதிப்பிற்குரிய" இந்திய ஆண்கள் தங்களுடைய நேரத்தை எப்படி செலவழிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?முக்கால்வாசி இந்திய ஆண்கள் 703 நிமிடங்களுக்கு மேல்,அதாவது ஒரு நாளில் 11 மணி நேரத்திற்கு தங்களின் சொந்த பாதுகாப்பு,சாப்பிடுதல்,பெரும்பாலும் தூக்கம்,குடி இதற்குதான் கஷ்டப்பட்டு செலவழிக்கிறார்களாம்.

துரும்பைக்கூட அசைக்க மாட்டோம்:

துரும்பைக்கூட அசைக்க மாட்டோம்:

"இது வெறும் கலாச்சார நடைமுறை அல்ல.இது ஒரு பெருமைப்படக்கூடிய விசயம் ஆகும். அம்மாக்கள் தங்களது மகன் வீட்டில் ஒரு துரும்பைக்கூட அசைக்காததற்காக சந்தோஷபடவேண்டும்" என்று கிண்டலாக கூறியுள்ளார் சந்தோஷ் தேசாய் என்ற கட்டுரையாளர்.

வெந்நீர் கூட வைக்க தெரியாத ஆண்கள்:

வெந்நீர் கூட வைக்க தெரியாத ஆண்கள்:

"16 சதவீதம் ஆண்கள் தங்களது மனைவிக்கு உண்மையாகவே உதவ நினைக்கிறார்கள்.ஆனால்,அவர்களுக்கு ஒரு சிலிண்டர் மாற்ற, தேனீர் தயாரிக்க கூட தெரியவில்லை என்பது வேதனைக்குரிய உண்மை" என்கிறார் சைரி சாகால் என்ற ஆன்லைன் பெண் தொழில் வல்லுனர்.

தப்பித்தவறி ஆண்கள் யாரேனும் வீட்டு பணி செய்தால் இந்த தொலைக்காட்சிகள் அவர்களை கோமாளி போல் சித்தரிக்கின்றன.

தொலைக்காட்சிகளே திருந்துங்கள்:

தொலைக்காட்சிகளே திருந்துங்கள்:

எடுத்துக்காட்டாக ஒரு பிரபலமான டிடர்ஜெண்ட் விளம்பரத்தின் காட்சியில்,"ஒரு சிறு குழந்தை,விருந்தினர்களின் மத்தியில் தந்தையை போல் நடித்துக் காட்டுகிறது.வெளியில் ராஜாவை போல் நடந்து கொள்ளும் தந்தை,வீட்டில் என்ன செய்வார் என்ற கேள்விக்கு அந்த குழந்தை தனது தந்தையின் சட்டையை தோய்ப்பது போல் நடிக்கிறது விருந்தினர்களின் சிரிப்புக்கு மத்தியில்"

ஒன்றிரண்டு பரவாயில்லை:

ஒன்றிரண்டு பரவாயில்லை:

அதே நேரத்தில் இதற்கு மாறாக மற்றொரு விளம்பரம் கணவன்,மனைவி துவைக்கும் வேலையை பகிர்ந்து கொள்வதாக காட்டி உள்ளது."இதுதான் நடக்க வேண்டும்" என தேசாய் கூறியுள்ளார்.

மாற்றங்கள் உண்டுதான்:

மாற்றங்கள் உண்டுதான்:

மாற்றங்கள் சில இடங்களில் நடந்துள்ளது உண்மைதான்.ஆனால்,காய்கறி வாங்கி வர தயாராய் இருக்கும் ஆண்கள் அதை நறுக்கி தர தயாராக இல்லை.

தோள் மட்டும் அல்ல தோழமையும் கொடுங்கள்:

தோள் மட்டும் அல்ல தோழமையும் கொடுங்கள்:

நிச்சயமாக,எல்லாரையும் ஒரே தூரிகையால் வண்ணம் தீட்ட முடியாது.பல ஆண்கள் தங்களது மனைவிக்கு தோள் கொடுக்கிறார்கள்தான்.ஆனாலும்,இந்த மகளிர் தினத்தில் எல்லா கணவன்களும்,மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவ ஆரம்பித்தால் இதுதான் உண்மையான வாழ்த்தாக அமையும்.

English summary
No, it isn't just a feeling. You actually are slaving several more hours over the stove, the mop and childcare while your husband, father and brother are busy watching cricket.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X