For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி.யில் சிக்கிய இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி ஜாஸ் ஷேக் .. சில திடுக்கிடும் தகவல்கள்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு சிக்கிய இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி அஜாஸ் ஷேக் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் ஜாமா மசூதி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அஜாஸ் ஷேக், உத்தரப்பிரதேச மாநிலம், சஹாரன்பூரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டான்.

இந்த அஜாஸ் சேஷ் குறித்த திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • 27 வயதாகும் அஜாஸ் ஷேக், மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவன்
  • இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் வெடிகுண்டுகளை தயாரிப்பதிலும் வெடிக்க வைப்பதிலும் கை தேர்ந்தவன்.
  • அஜாஸ் ஷேக் திருமணம் செய்து புனேயில் பிபிஓ பணியாளரைப் போல வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான்.
  • பல ஆண்டுகாலம் தலைமறைவாக இருந்த அஜாஸ், சகாரன்பூர் ரயில் நிலையத்துக்கு வருவதாக கிடைத்த தகவலை அடுத்த டெல்லி போலீசார் சுற்றி வளைத்தனர்.
  • முன்னதாக சில காலம் நேபாளத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான்.
  • தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள அஜாஸின் உறவினர் மொக்சின் செளத்ரி மூலமாகவே இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தில் சேர்ந்துள்ளான்.
  • 2010ஆம் ஆண்டு ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாசின் பட்கலுக்கு உதவி இருக்கிறான்.
  • கம்ப்யூட்டர் நெட் ஒர்க்கிங் மற்றும் கம்ப்யூட்டர்களை ஹேக்கிங் செய்வதிலும் கில்லாடியாம்.
  • போலி அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைத் தயாரிப்பதிலும் கைதேர்ந்தவனாம்
  • பாகிஸ்தானில் இருந்து வரும் மின் அஞ்சல்களை இதர தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியையும் மேற்கொண்டதும் அஜாஸ்தான்.
  • ஹவாலா நபர்கள் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தீவிரவாதிகளுக்கு பணம் விநியோகம் செய்ததும் அஜாஸ்தான்.
  • ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டிருக்கிறான்.
English summary
In a major success, a special cell of Delhi Police had on Friday arrested Indian Mujahideen (IM) terrorist Ejaz Sheikh, who was absconding in several terror cases including Jama Masjid terror attack in the national capital, from Western Uttar Pradesh's Saharanpur district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X