For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இருட்டில் "அந்த" சம்பவம்.. கல்யாண பெண்ணின் முக்காடை எடுத்து பார்த்த மாப்பிள்ளை.. ஒரே அலறல்

இருட்டில் மணமகள்கள் மாறிவிட்டதால் மணமகன்கள் குழப்பமடைந்தனர்

Google Oneindia Tamil News

போபால்: வித்தியாசமான முறையில் திருமணம் ஒன்று மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. திடீரென கரண்ட் கட் ஆகிவிட்டதால், இப்படி ஒரு விபரீதம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரை சேர்ந்தவர் ரமேஷ் லால்.. இவருக்கு கோமல், நிகிதா, கரிஷ்மா என்று 3 மகள்கள் இருக்கிறார்கள்.

அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.! அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.!

3 மகள்களையுமே சின்ன வயதில் இருந்தே ஒரே மாதிரி வளர்த்து வந்தார் ரமேஷ்.. படிப்பு, துணிமணிகள், என எதுவாக இருந்தாலும், ஒரே மாதிரிதான் கவனித்து வளர்த்தார்.

 மகள்கள்

மகள்கள்

அந்தவகையில் 3 மகள்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க ரமேஷ் ஆசைப்பட்டார்.. அதன்படியே மூன்று மகள்களுக்கும் மணமகன்களை தேடிப்பிடித்தார்.. மணமகன்கள் மூன்று பேருமே வேறு வேறு குடும்பங்களை சேர்ந்தவர்கள்.. ராம், கணேஷ், தங்க்வாரா ஆகியோர்தான் அந்த மணமகன்கள்.. இதையடுத்து திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது.. ஒரே மேடையில், ஒரே முகூர்த்தத்தில் நேரம் குறிக்கப்பட்டது.

 மண்டபம்

மண்டபம்

திருமண நாளன்று மண்டபமே தடபுடலாக காணப்பட்டது.. உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ இருந்தனர்.. 3 மணப்பெண்களும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருந்தனர்.. மூன்று மணப்பெண்களும் தலையில் முக்காடு போட்டு மூடி இருந்தனர்... திருமண சடங்கும் ஜரூராக நடந்து கொண்டிருந்தது.. அந்த நேரம் பார்த்து நம்மஊர் போலவே, அங்கேயும் கரண்ட் போய்விட்டது. இதனால் திருமண மண்டபம் முழுவதும் போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாக காணப்பட்டது.

 மணப்பெண்கள்

மணப்பெண்கள்

அங்கு ஜெனரேட்டர் வசதியும் இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் மணமக்களின் உறவினர்கள் தவித்தனர். திருமணத்திற்கான நேரமும் நெருங்கிவிட்டதால், மணமக்கள் ஒன்றாக அமர வைக்கப்பட்டு அதையும் மீறி சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, அக்னியையும் சுற்றி வந்தனர்.. அப்போது எதிர்பாராத விதமாக இருட்டில் மணப்பெண்கள் மாறிவிட்டனர். மந்திரம் சொல்லி கொண்டிருந்த பண்டிதரும், இதனை கவனிக்காமல் மணப்பெண்களை மாற்றி சுற்றி வரும் படிசெய்துவிட்டார்...

 மாப்பிள்ளைகள்

மாப்பிள்ளைகள்

திருமணமும் முடிந்துவிட்டது.. 3 பெண்களும் தங்களது கணவன் வீட்டிற்கு சென்றனர்.. அதுவரை அந்த முக்காடை கழட்டவே இல்லை.. மாமியார் வீட்டிற்கு சென்ற பிறகுதான், தாங்கள் போட்டு இருந்த முக்காடை அகற்றினர்... முக்காடை திறந்ததுமே மாப்பிள்ளைகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. "இந்த பெண்ணை நான் பார்க்கவில்லையே? எப்படி மணப்பெண் மாறியது? வேண்டுமென்றே ஏதோ சதி செய்துவிட்டீர்கள்" என்று கேட்டு பெண் வீட்டாருடன் மாப்பிள்ளைகள் சண்டை போட்டார்கள்..

 திருமண சடங்கு

திருமண சடங்கு

பிறகுதான், கரண்ட் போய்விட்டதால், மணப்பெண் மாறிவிட்டதை 3 மாப்பிள்ளைக்கும் சொல்லி சமாதானப்படுத்தினர்.. அதன்படியே, அந்த மந்திரம் சொன்ன அதே புரோகிதரை மறுபடியும் வைத்து, மறுபடியும் சடங்கை நடத்தலாம் என்று முடிவானது.. அதன்படியே அந்த புரோகிதர் திருமண சடங்கை நடத்திவைக்க, ஒருவழியாக சம்பந்தப்பட்ட பெண்களுடன் திருமணம் நடந்து முடிந்தது..!

English summary
Innovative incident ujjain and three brides marries sister groom after power cut இருட்டில் மணமகள்கள் மாறிவிட்டதால் மணமகன்கள் குழப்பமடைந்தனர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X