For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சென்று நாடு திரும்புபவர்களை என்ன செய்வது?

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேரும் இந்தியர்களை நாடு திரும்ப அனுமதிக்கலாமா? அவர்களுக்கு அறிவுரை வழங்குவதா அல்லது தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததற்காக தண்டிப்பதா?

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு இந்தியாவில் ஆதரவு பெருகி வருகிறது. கடந்த வாரம் கவுன்சிலிங்கிற்கு பிறகு 9 பேரை போலீசார் விடுவித்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர வெளிநாடு சென்ற அந்த 9 பேரும் துருக்கியில் இருந்து பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டனர். அதற்கு முன்பு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர ஆர்வம் காட்டிய ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கத்தாரில் இருந்து அழைத்து வரப்பட்டார். அவரும் கவுன்சிலிங்கிற்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.

Interview- ISIS returnees, should they come back?

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர வெளிநாடு சென்று திரும்பியவர்களை அரசு எவ்வாறு கையாளுகிறது என்பது குறித்து ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சி.டி. சஹாய் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,

கவுன்சிலிங் உதவுகிறதா?

வேறு என்ன செய்ய முடியும். எல்லையில் தீவிரவாதிகள் நம் நாட்டுக்குள் நுழைய முயன்றால் இடுப்புக்கு கீழ் சுட முடியாது. ஒரு அமைப்பில் சேர பயணம் மட்டுமே செய்துள்ளவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது. அவர்கள் பயணம் செய்து தடை செய்யப்பட்ட அமைப்பில் சேர்ந்து செயல்பட்டிருந்தால் அது வேறு.

என்ன செய்ய வேண்டும்?

ஏதாவது குற்றம் செய்தால் தான் வழக்குப் பதிவு செய்ய முடியும். ஒருவர் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து ஏதாவது குற்றம் செய்தால் அவர் மீது இந்திய ஏஜென்சீக்கள் நடவடிக்கை எடுக்க முடியும். போதிய ஆதாரங்களை சேகரித்து விரைவில் வழக்கு தொடர வேண்டும்.

விடுவிப்பு

ஒருவரை தண்டிக்கும் முன்பு அவர் குற்றம் செய்தாரா என்பதை தீர விசாரிக்க வேண்டும். இது போன்ற விஷயங்களில் நாம் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். ஒருவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர வெளிநாடு சென்று இந்தியா திரும்பினால் அவரிடம் அவர் செய்த செயலின் பயங்கரத்தை பற்றி விவரிக்க முயற்சி செய்கிறோம். அவர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து போலீசார் அறிவுரை வழங்குகிறார்கள். அவ்வாறு செய்தால் வாலிபர்கள் வழி தவறாமல் இருக்க உதவும்.

மீண்டும் மீண்டும் தவறு செய்தால்?

கவுன்சிலிங் அளிப்பது வேலை செய்கிறது. அந்த நபர் மீண்டும் வழிதவறிச் செல்லாமல் பார்த்துக் கொள்வது அவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் பொறுப்பு. போலீஸ் ஆவணங்களில் தங்களின் பெயர் வருவதை நினைத்து பலர் அஞ்சுகிறார்கள். உள்ளூர் போலீசார் தான் குற்றம் செய்பவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மூளைச்சலவை செய்யப்பட்டவர்களை என்ன செய்ய?

கவுன்சிலிங் பெரும்பாலும் வேலை செய்கிறது. ஆனால் முற்றிலும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பதால் பலனில்லை. ஒன்று முற்றிலும் மூளைச்சலவை செய்யப்படுவார்கள் அல்லது சிறப்பான வேலை மற்றும் எதிர்காலம் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஆசை வார்த்தை காட்டப்படுவார்கள். முற்றிலும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் மறுபடியும் அதே தவறை செய்ய முயற்சிப்பார்கள்.

எந்த மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

இது குறித்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். தற்போது தீவிரவாதம் குறித்து நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளே 9/11 தாக்குதலுக்கு பிறகு தான் விழித்தன.

மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களோடு மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏராளமாக உள்ளது என்றார் சஹாய்.

English summary
Should those joining the ISIS be allowed to return to India? Should they be let off with counseling or should they be prosecuted for trying to join a banned terror outfit?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X