சாலை, கடல், வான் போக்குவரத்துக்கு வழிகாட்டும் ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ.. வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதலுக்கு உதவும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோளை, இஸ்ரோ இன்று அதிகாலை 4:04 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தியது.

ஜிபிஎஸ் தொழில்நுட்பத ்திற்கு இணையாக நாவிக் எனப்படும் போக்குவரத்து, கண்காணிப்பு வசதி மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ அனுப்பி வருகிறது. இதுவரை இந்த வகை செயற்கைக்கோள்கள்7 அனுப்பப்பட்டுள்ளன.

IRNSS-1I satellite launch successful

அந்த வரிசையில், கடல்சார் ஆராய்ச்சி, கடல்சார் கண்காணிப்பு, சாலை போக்குவரத்து மற்றும் வான்வெளி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பேரிடர் மேலாண்மைக்காகவும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஐ செயற்கைக் கோளை ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டது.

இந்த செயற்கைகோள் இன்று அதிகாலை 4.04 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்டது. செயற்கைகோளின் மொத்த எடை 1,425 கிலோ ஆகும். இதன் ஆயுள் காலம் 10 ஆண்டுகள். இந்த ஏவுகணை, பிஎஸ்எல்வி சி41 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ISRO has launched the navigational satellite IRNSS-1I successfully this morning from Sriharikota.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற