ஜனாதிபதி தேர்தல்.. சுஷ்மா சுவராஜை களமிறக்க பாஜக திட்டம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் பாஜக சார்பில் வெளியுறுவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வேட்பாளராக இறக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2012-ல் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ஓய்வு பெறவுள்ளார். இவரது பதவிக் காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால் அடுத்ததாக அந்த பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்று ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பாஜக இதில் தீவிரமாக உள்ளது.

ஜோஷி இல்லை

ஜோஷி இல்லை

ஆர்எஸ்எஸ் அமைப்பு, பாஜக மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தது. ஆனால் அவர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறதால் அவரது பெயர் கைவிடப்பட்டது. அத்வானி பெயரும் பரிசீலிக்கப்பட்டு அதுவும் போண்டியானது.

சுமித்ரா மகாஜன், முர்மு

சுமித்ரா மகாஜன், முர்மு

இந்நிலையில் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்மு ஆகியோரை வேட்பாளராக நிறுத்த பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அவர்களை நிறுத்தினால் பொது வேட்பாளராக அங்கீகரிக்க எதிர்க்கட்சிகள் மறுக்கும் என்று பாஜக கருதுகிறது.

பாஜக உறுதி

பாஜக உறுதி

அதேவேளையில் அரசியலுக்கு அப்பாற்றபட்டவர்களை ஜனாதிபதியாக்கக் கூடாது என்ற முடிவில் பாஜக, சங் பரிவார் அமைப்புகள் உறுதியாக உள்ளன. எனவே சுஷ்மா ஸ்வராஜை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் அவரை எதிர்க்கட்சிகள் எதிர்க்காது என்றும் கருத்தொற்றுமை ஏற்படும் என்றும் பாஜக தற்போது நம்புகிறதாம்.

மம்தா ஆதரவு

மம்தா ஆதரவு

எதிர்க்கட்சிகளை பொருத்தவரை ஜனாதிபதி வேட்பாளர் என்பவர் மதசார்பற்றவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. இதையே தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கருதுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கும் சுஷ்மாவுக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது.

சுஷ்மாவுக்கு பிரச்சினை இல்லை

சுஷ்மாவுக்கு பிரச்சினை இல்லை

வெளியுறவுத் துறை அமைச்சர் என்பவர் வெளிநாடுகளுக்கு சென்றே ஆக வேண்டும் என்பது கட்டாயம். இப்பதவியில் உள்ள சுஷ்மாவுக்கு சமீபத்தில்தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனால் அவரால் முன்புபோல் வெளிநாடுகளுக்கு செல்ல முடிவதில்லை என்பதால் ஜனாதிபதி பதவியை ஏற்க அவருக்கு பிரச்சினை ஏதும் இருக்காது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வேட்பாளர் யார்

வேட்பாளர் யார்

இதற்கிடையே, ஜூன் 25-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா பயணம் செல்வதற்கு முன்னர் அதாவது ஜூன் 24-ஆம் தேதிக்குள் வேட்புமனுதாக்கல் உள்ளிட்ட பணிகளை முடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sushma Swaraj has become the lead contender for the next President of India. The name of the External Affairs Minister has emerged as the front runner after deliberations by the BJP's panel.
Please Wait while comments are loading...