For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய ஐடி துறை ஊழியர்கள் காட்டில் அடை மழை: ஆய்வில் தகவல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) துறையில், அதிகபட்சமாக சம்பளம் கிடைக்கிறது. அத்துறையினருக்கு சராசரியாக மணிக்கு, 346 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக, உற்பத்தி துறையில், சராசரியாக, மணிக்கு 254 ரூபாய் வழங்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

எம்.எஸ்.ஐ எனப்படும், மான்ஸ்டர் ஊதியக்குறியீடு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் இதுகுறித்து சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிற துறைகளை ஒப்பிட்டால் ஐடி துறையில் சம்பளம் கொழிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் கூறப்பட்டிருப்பதை பாருங்கள்

சேவைத்துறை

சேவைத்துறை

ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சராசரியாக, மணிக்கு, 346 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இரண்டாவது இடத்தில் பி.எப்.எஸ்.ஐ. எனப்படும், வங்கி, நிதி மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய சேவை துறை உள்ளது.

சம்பளம் போதவில்லை

சம்பளம் போதவில்லை

சேவைத்துறையில் பணியாற்றுவோருக்கு சராசரியாக, மணிக்கு, 300 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. நாட்டில் அதிகபட்ச சம்பளம் கிடைத்தாலும், இந்த இரு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், 'சம்பளம் போதவில்லை' என, வருத்தப்படுகின்றனர் என்கிறது அந்த ஆய்வு.

குறைந்த சம்பளம்

குறைந்த சம்பளம்

நாட்டிலேயே மிகக்குறைவாக சம்பளம் வாங்குவோர், உற்பத்தித் துறை ஊழியர்கள். சராசரியாக, மணிக்கு, 254 ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைக்கிறது. முதுகலைப் பட்டம் பெற்றவருக்கு கூட, உற்பத்தித் துறையில், அதிகபட்சம், மணிக்கு, 260 ரூபாய் சம்பளமே தரப்படுகிறதாம்.

வெளிநாட்டு நிறுவனங்கள் பெஸ்ட்

வெளிநாட்டு நிறுவனங்கள் பெஸ்ட்

வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை விட, இரு மடங்கு சம்பளம் தருகின்றன. வங்கி, நிதி, இன்சூரன்ஸ் துறையில், சிறு நிறுவனங்கள், மணிக்கு, 197 ரூபாயும், பெரிய நிறுவனங்கள், மணிக்கு, 324 ரூபாய் ஊதியம் அளிக்கின்றன. இவ்வாறு அந்த ஆய்வு கூறுகிறது.

பிற நாடுகளை ஒப்பிட்டால்

பிற நாடுகளை ஒப்பிட்டால்

ஐடி துறை ஊழியர்களுக்கு இந்திய அளவில் அதிக சம்பளம் கிடைத்தாலும்கூட, சர்வதேச அளவில் ஒப்பிட்டு பார்த்தால் இந்திய ஐடி ஊழியர்களின் ஊதியம் என்பது மிக குறைந்த அளவுதான் என்று சமீபத்தில் வெளியான மற்றொரு ஆய்வு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Information Technology sector employees get the highest pay in India with a median gross hourly salary of Rs 346.42, while those in the manufacturing sector get paid the least at Rs 254.04, says a report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X