வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆக. 5 வரை கால அவகாசம் நீட்டிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு கட்டாயமாக்கியது. பெரும்பாலானோர் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இந்நிலையில் இன்று வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.

IT Returns deadline extend

இதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமையும் சென்னை வருமான வரித் துறை அலுவலகத்தின் சிறப்பு கவுன்ட்டர்கள் இயங்கின. இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி கணக்கை இணையத்தின் மூலம் தாக்கல் செய்துள்ளனர்.

Income Tax Raid in Former CBI Director F V Arul's House-Oneindia Tamil

இந்நிலையில் கடைசி நேரத்தில் வருமான வரி செலுத்துவோர் சந்திக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித் துறை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The last date for filing of income tax returns (ITRs) for the financial year 2016-17 has been extended till august 5th.
Please Wait while comments are loading...