For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இத்தாலி, ஜெர்மனியில் இந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல்.. இந்திய பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுமா?

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: இத்தாலி, ஜெர்மனியில் இந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டுவிட்டன.

இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை தேர்தல் நடக்க இருக்கிறது. இரண்டு நாட்டிலும் ஆட்சி மாற்றம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

இரண்டிலும் மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிரான கொள்கை மற்றும் கருத்துக்களை கொண்டு இருக்கிறார்கள். இது இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

மோசமான அதிபர்கள்

மோசமான அதிபர்கள்

இத்தாலியில் கடந்த 20 வருடங்களாக மிகவும் மோசமான ஆட்சியே நடந்து வந்துள்ளது. கடைசியாக வந்த 4 அதிபர்களும் மிகவும் மோசமான ஆட்சியை கொடுத்து இருக்கிறார்கள். ஜிடிபி 2 சதவிகிதத்திற்கும் கீழே சென்றுள்ளது. அதேபோல் லட்சக்கணக்கில் இளைஞர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள்.

நிறைய அகதிகள்

நிறைய அகதிகள்

அதுமட்டும் இல்லாமல் வெளிநாட்டு அகதிகள் பலர் இங்கு வந்துள்ளார்கள். ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் பேர் வரை அங்கு அகதிகளாக குடியேருக்கிறார்கள். இதனால் அங்கு இருக்கும் நபர்களுக்கும் வேலை வாய்ப்பு பறிபோகிறது. இன்னும் சில வருடங்களில் அங்கு குடிமக்களை விட அகதிகள் அதிகம் இருப்பார்கள் என்றுள்ளனர்.

தேர்தல் நடக்கிறது

தேர்தல் நடக்கிறது

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அங்கு தீவிரமான போராட்டம் நடந்து வருகிறது. இளைஞர்கள் போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதில் அங்கு பாசிச கட்சிக்கு, சோஷலிச கட்சிக்கு இடையில் பெரிய கலவரமும் கூட உருவானது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது.

ஜெர்மன் தேர்தல்

ஜெர்மன் தேர்தல்

ஜெர்மன் தேர்தலும் இதேபோல்தான். 2017 இறுதியில் அங்கு ஒருகட்ட தேர்தல் நடந்தது. அங்கு மெஜாரிட்டி நிரூபிக்க இன்னும் 60 சதவீத வாக்குகள் தேவைப்படுகிறது. அதற்கான தேர்தலே தற்போது நடக்க இருக்கிறது. இந்த ஞாயிற்றுக் கிழமை நடக்கும் தேர்தலில் எந்த கட்சி அதிக பெரும்பான்மை பெறுகிறதோ அந்த கட்சி ஆட்சி அமைக்கும். ஆள போவது கிறிஸ்துவ கட்சியா இல்லை சமூக ஜனநாயகக் கட்சியா என்பது இந்த வாரம் தெரியும். கூட்டணி ஆட்சிக்கும் வாய்ப்புள்ளது.

மோசமடையும்

மோசமடையும்

இந்த இரண்டு தேர்தலிலும் முக்கியமான ஒற்றுமை ஒன்று இருக்கிறது. இரு நாட்டு மக்களும் யூரோ வர்த்தகத்திற்கு எதிராக இருக்கிறார்கள். இதனால் அங்கு ஆட்சி மாற்றம் பெரிய அளவில் யூரோவில் பாதிப்பை ஏற்படுத்தும். இது டாலர் மதிப்பையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இது இந்திய பொருளாதாரத்தை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.

English summary
Italy and German will face election this Sunday. Sources says that it will affect the Euro. So it will affect the dollars too. In Italy riot is already going on against government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X