For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்யசபாவை முடக்கிய ஜனதா கட்சிகள்! டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சமாஜ்வாடி உள்ளிட்ட 6 ஜனதா கட்சிகள் ஒன்றிணைந்து இன்று ராஜ்யசபா நடவடிக்கைகளை முடக்கின. அதன் பின்னர் டெல்லி ஜந்தர் மந்தரில் 6 கட்சித் தலைவர்களும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

பாரதிய ஜனதாவுக்கு எதிராக சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட 6 ஜனதா கட்சிகள் ஒரே கட்சியாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக 6 கட்சிகளும் ஒன்றிணைந்து டெல்லியில் இன்று மத்திய அரசைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தன.

parliament

இதனடிப்படையில் மத்திய அரசுக்கு எதிராக ராஜ்யசபாவில் 6 கட்சிகளின் எம்.பி.க்களின் ஒருங்கிணைந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சபை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக ஜந்தர் மந்தர் நோக்கி சென்ற 6 கட்சித் தலைவர்களும் அங்கு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு தலைமை வகித்த பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார், கருப்புப் பண மீட்பு உட்பட மோடி அரசு கொடுத்த வாக்குறுதி எதனையும் காப்பாற்றவில்லை என்று சாடினார்.

English summary
The parties of the Janata Parivar will simultaneously disrupt both Houses of Parliament on Monday - the penultimate day of the winter session - at noon before congregating at Jantar Mantar to highlight the Modi government's inability to act on the poll promises made by the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X