For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப. சிதம்பரம் மீது ஷூ வீசியவருக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்த ஆம் ஆத்மி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 2009ம் ஆண்டு அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் மீது ஷூவை வீசிய பத்திரிக்கையாளருக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி சீட் கொடுத்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது இந்தி நாளிதழ் ஒன்றின் சார்பில் வந்திருந்த பத்திரிக்கையாளரான ஜர்னைல் சிங் சிதம்பரம் மீது ஷூவை வீசினார். சிதம்பரம் நகர்ந்து கொண்டதால் ஷூ அவர் மீது படவில்லை. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Jarnail Singh, who hurled shoe at PC, to contest in LS election

ப.சிதம்பரம் மீது ஷூவை வீசியதற்காக நான் வருத்தப்படவில்லை என்று ஜர்னைல் சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலில் கவிஞர் குமார் விஷ்வாஸ், சமூக சேவகி மேதா பட்கர் உள்ளிட்டோரின் பெயர்களுடன் ஜர்னைல் சிங்கின் பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Jarnail Singh, the journalist who hurled shoe at then home minister P. Chidambaram in 2009 is given ticket by the Aam Admi party to contest in the lok sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X