For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வறுமையால் 'மண்' தான் சோறு... 100 வயதிலும் பழக்கத்தை விடாத ஜார்க்கண்ட் அதிசய தாத்தா!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 100 வயது முதியவர் ஒருவர் தனது அன்றாட வாழ்வில் மண் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    மண்ணை சோறாக உண்ணும் 100-வயது தாத்தா

    ராஞ்சி: வறுமையால் 11 வயதில் மண் சாப்பிட்டு பழகியவர் 100 வயதிலும் மண் சாப்பிடும் பழக்கத்தை விடாமல் இருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் இந்த அதிசய தாத்தா தனது ஆரோக்கியத்தின் ரகசியமும் அது தான் என்று சொல்கிறார்.

    கரு பஸ்வன், ஜார்க்கண்ட் மாநிலம் சகேப்கஞ்ச் மாவட்டத்தில் வசிச்கிறார். வறுமையின் காரணமாக 11 வயதில் மண் சாப்பிடத் தொடங்கியுள்ளார் கரு பஸ்வான். ஒரு நாளைக்கு ஒரு கிலோ மண் வரை கூட சாப்பிட்டு விடுவாராம் இந்த தாத்தா.

    தனக்கு மண் சாப்பிடும் பழக்கம் எப்படி வந்தது என்று கூறும் பஸ்வான் "என்னுடைய நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது, போதிய வருமானம் இல்லை. ஆனால் 10 குழந்தைகளுக்கு நான் சாப்பாடு போட்டாக வேண்டும் இதனால் வாழ்க்கையில் மிகவும் விரக்தியில் இருந்தேன்."

    வறுமையால் மண் சாப்பிடும் பழக்கம்

    வறுமையால் மண் சாப்பிடும் பழக்கம்

    ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளவும் நினைத்தேன், அப்போது தான் வறுமையின் காரணமாக இந்த மண் சாப்பிடும் பழக்கம் வந்தது. ஆனால் நாளாக நாளாக நான் இதற்கு அடிமையாகிவிட்டேன். இப்போது என்னால் மண் சாப்பிடும் பழக்கத்தை விட முடியவில்லை என்கிறார் பஸ்வான்.

    தடுக்க முடியவில்லை

    தடுக்க முடியவில்லை

    கரு பஸ்வானின் மூத்த மகன் சியா ராம் பஸ்வான் மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு முறை இவரின் இந்த பழக்கத்தை நிறுத்த முயற்சித்துள்ளனர். ஆனால் யாருடைய பேச்சையும் கேட்பதாக இல்லை கரு பஸ்வான்.

    ஆரோக்கியமான தாத்தா

    ஆரோக்கியமான தாத்தா

    இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தினசரி மண் சாப்பிடும் வழக்கம் இருந்தாலும் அவருடைய ஆரோக்கியத்தில் எந்த குறையும் இல்லை. 100 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் கரு பஸ்வான் ஃபிட்டாக நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது தான்.

    எதனால் இந்த விநோத பழக்கம்

    எதனால் இந்த விநோத பழக்கம்

    கரு பஸ்வான் 2015ம் ஆண்டில் பீஹாரின் சபோர் க்ரிஷி வித்யாலயா விருதை இந்த விநோத பழக்கத்திற்காக பெற்றுள்ளார். இது போன்ற விநோதமான பழக்கத்திற்கு பிகா சின்ட்ரோம் என்று மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. ஒரு பொருளின் நன்மை தீமை என்ன, அதில் என்ன ஊட்டச்சத்து இருக்கிறது என்பது தெரியாமல் அந்தப் பொருளின் மீது ஆசையை ஏற்படுத்திக் கொள்வது தான் இந்த பிகா சின்ட்ரோம் என்று சொல்லப்படுகிறது.

    English summary
    Jharkhand's 100 year old man Karu Paswan developed eating mud as a habit at his 11 years due to poverty still continuing this habit and syas without eating mud he cannot survive.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X