For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

15 நிமிடத்திலேயே தீர்ப்பை சொல்லிய நீதிபதி: மாலை வரை இழுத்தடித்த ஜெ. தரப்பு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஜெயலலிதா கோர்ட்டுக்குள் வந்த அடுத்த கால் மணி நேரத்திலேயே, தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

4 பேரும் குற்றவாளிகள்...

4 பேரும் குற்றவாளிகள்...

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் காலை 11 மணிக்கெல்லாம் பரப்பன அக்ரஹாரா கோர்ட்டுக்கு உள்ளே சென்றனர். தீர்ப்பை வாசிக்க தொடங்கிய நீதிபதி அடுத்த 15 நிமிடங்களில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்துவிட்டார்.

1 மணிக்கு தள்ளிப் போனதாக சொன்ன ஜெ. வக்கீல்கள்..

1 மணிக்கு தள்ளிப் போனதாக சொன்ன ஜெ. வக்கீல்கள்..

அதன்பிறகு தண்டனை விவரத்தையும் 12 மணிக்குள்ளாக சொல்லி முடித்துவிட்டார். ஆனால் உடனடியாக தண்டனை விவரத்தை ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களிடம் வெளியிடாமல் பகல் 1 மணிக்கு தீர்ப்பு தள்ளிப்போனதாக கூறினர்.

ஜாமீன் கேட்டனர்...

ஜாமீன் கேட்டனர்...

இந்நிலையில், அதிமுக வக்கீல், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நான்காண்டு தண்டனையை 2 ஆண்டுகளுக்கும் குறைவாக குறைக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளார். இதற்கு உடல் நலக்குறைவை காரணமாக எடுத்துரைத்துள்ளார். மேலும் ஜாமீன் வழங்கவும் ஆவண செய்ய கேட்டுள்ளார். இதற்கு அரசு வழக்கறிஞர் பவானி சிங் எதிர்ப்பு தெரிவிக்கவே, அது தொடர்பான வாதம் நடந்துள்ளது.

சாப்பிட்டுவிட்டு வந்து உறுதி காட்டிய நீதிபதி...

சாப்பிட்டுவிட்டு வந்து உறுதி காட்டிய நீதிபதி...

இந்த வாதம் நடந்தபோதுதான் உணவு இடைவேளைக்கு நீதிபதி விட்டுள்ளார். இதன்பிறகு, உணவு சாப்பிட்டுவிட்டு வந்த பிறகு, 4 ஆண்டு சிறை தண்டனையை குறைக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்த நீதிபதி, ஜாமீனும் வழங்க முடியாது என்று மறுத்துவிட்டார். வழக்கு நடைபெற்றபோது கோர்ட்டில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் ஒருவர் கோர்ட்டுக்கு வெளியே பத்திரிகையாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார்.

English summary
Judgment was delivered With-in 15 minutes from the starting time, sources told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X