For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயிலின் வேகத்திற்கு பறந்த போஸ்டரில் இருந்த பெண்ணின் கூந்தல்... அதிர்ந்து போன ஸ்வீடன் மக்கள்

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: ரயில்வே ஸ்டேஷனில் பெண் ஒருவர் தனது நண்பருக்காகக் காத்திருப்பார். அப்போது அவர்களுக்கு இடையில் ஒரு ரயில் வரும். ரயில் வந்த வேகத்தில் பெண்ணின் கூந்தல் காற்றில் அலைந்து சிக்காகி விடும்.

கலைந்த கூந்தலுடன் இருக்கும் தோழியைக் காணச் சகிக்காமல் நண்பர் முகத்தை திருப்பிக் கொள்வார். பின்னர் குறிப்பிட்ட எண்ணெயைப் பயன்படுத்துவார் அப்பெண். இந்த விளம்பரத்தை நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்கள்.

ஆனால், அதே சம்பவம் விளம்பர போர்டில் உள்ள பெண்ணுக்கு நடந்தால், சுற்றிருப்பவர்களுக்கு கண்ணைக் கட்டாமல் என்னச் செய்யும்...? அப்படித் தான் ஆனது ஸ்வீடன் மக்களுக்கு.

ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் ரயில் நிலையம் ஒன்றில் விளம்பர போர்டில் உள்ள பெண்ணின் கூந்தல் காற்றில் அலைபாய்வதாக பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தான் தெரிந்தது அதில் மாயமுமில்லை, மந்திரமுமில்லை, அது சம்பந்தப்பட்ட எண்ணெய் கம்பெனியின் விளம்பர யுக்தி என்று.

சென்சார் போர்டு....

சென்சார் போர்டு....

ரயில் வரும் ஓசை கேட்டால் இயங்குவது போல சென்சார் பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர் அந்த விளம்பர போர்டை.

அலை பாயும் கூந்தல்...

அலை பாயும் கூந்தல்...

அதன்படி, ரயில் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும், டிஜிட்டல் போர்டில் உள்ள பெண்ணின் கூந்தல் காற்றில் அலை பாயத் தொடங்கி விடுகிறது. பின்னர் ரயில் நின்றதும் தலைமுடி கலைவதும் நிற்கிறது.

விளம்பரம்...

விளம்பரம்...

உடனடியாக அந்த விளம்பர மாடல் சிரித்தபடியே தனது கூந்தலை சரி செய்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட எண்ணெயின் விளம்பரம் திரையில் தோன்றுகிறது.

முதல்முறை பயம்...

முதல்முறை பயம்...

ஒவ்வொரு முறை ரயில் வரும்போதும் இவ்வாறு நடக்கிறது. ஆனால், முதல் தடவை இவ்வாரு விளம்பர மாடலின் முடி காற்றில் பறந்த போது அங்கிருந்த மக்கள் சற்று பயந்து தான் போய்விட்டார்களாம்.

பார்வையாளர்கள்...

பார்வையாளர்கள்...

தற்போது ரயிலில் பயணம் செய்ய அங்கு வருபவர்களை விட, இந்த விளம்பரத்தை பார்த்து ரசிப்பதற்காகவே அங்கு தினமும் நிறையபேர் வந்து போகிறார்களாம்.

English summary
It's an ordinary day in a subway station in the heart of Stockholm, a day just like any other. Then the train arrives and suddenly it is rush hour, not for the passengers waiting on the platform but for the girl in the billboard advertisement peddling a local hair care brand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X