கர்நாடக தேர்தல் முடிவு.. கார்கேவின் காத்திருப்பு வீணாப்போச்சே...!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  11 மணிக்கு மேலதான் சரியான நிலவரம் தெரியும்.. மல்லிகார்ஜூன கார்கே!

  பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவில் 11 மணிக்கு மேல்தான் சரியான நிலவரம் தெரியவரும் என காத்திருந்த கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் காத்திருப்பு வீணானது.

  கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. சற்றுமுன் நிலவரப்படி பாஜக 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

  காங்கிரஸ் 67 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 45 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மற்றவை ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

  சரியான நிலவரம்

  சரியான நிலவரம்

  இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவின் சரியான நிலவரம் 11 முதல் 11.30 மணிக்குதான் தெரியும்.

  கூட்டணி குறித்து ஆலோசனை

  கூட்டணி குறித்து ஆலோசனை

  குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட்டுடன் ஜேடிஎஸ் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளேன். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

  சித்தராமையா

  சித்தராமையா

  காங்கிரஸ் வெற்றி பெற்று, தலித் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் விரும்பினால், அதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்தார்.

  ஏற்க தான் தயார்

  ஏற்க தான் தயார்

  இதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, முதலமைச்சராக பதவியேற்குமாறு கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால், அதனை ஏற்க தான் தயார் என்று கூறியிருந்தார்.

  காத்திருந்த கார்கே

  காத்திருந்த கார்கே

  இந்நிலையில் 11. 30 மணிக்கு பிறகு பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களை தாண்டி அதிக இடங்களில் பாஜக முன்னிலை வகித்துள்ளது. இதனால் சரியான நிலவரம் தெரியவரும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என காத்திருந்த மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Karnataka assembly election result: Correct position will be known at 11-11.30 am said Congress leader Mallikarjun Kharge.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற