மற்றொரு புதுச்சேரியாக மாறுகிறது பெங்களூரு.. குடிமகன்கள் கொண்டாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக பட்ஜெட்டில் ஒயின், பீர் மற்றும் மதுபானங்கள் மீதான வாட் வரி நீக்கப்பட்டுள்ளது குடிமகன்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

கர்நாடக அரசு பட்ஜெட் இன்று காலை 11.30 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சகத்தை தன் வசம் வைத்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

முதல்வராக அவர் தாக்கல் செய்துள்ள 4வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நம்ம கேன்டீன்

நம்ம கேன்டீன்

பட்ஜெட்டில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா கேன்டீன் பாணியில் நம்ம கேன்டீன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மது

மது

ஒயின், பீர் மற்றும் மதுபானங்கள் மீதான வாட் வரியை நீக்குவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை அடுத்து யுனைடெட் ப்ரூவரீ, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் ஆகியவற்றின் பங்குகளின் விலை 2.75 சதவீதம் அதிகரித்துள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

ராடிகோ கைதான் மற்றும் குளோபஸ் ஸ்பிரிட்ஸ் ஆகியவற்றின் பங்குகளின் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் வருவாயில் 25 சதவீதம் கர்நாடகாவில் இருந்து தான் வருகிறது.

குடிமகன்கள்

குடிமகன்கள்

சித்தராமையா மதுபானங்கள் மீதான வாட் வரியை நீக்கியுள்ளதால் குடிமகன்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தராமையா வாழ்க என்று அவரை வாழ்த்தி வருகிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka government has abolished VAT on wine, beer and hard liquor. This announcement has made drinking population of the state happy.
Please Wait while comments are loading...