அட, சட்டசபை கிடக்குது... சினிமா விழாவில் பெண்களுடன் குத்தாட்டம் போட்ட அம்பரீஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் : கர்நாடக மாநில கூட்டத் தொடரை புறக்கணித்துவிட்டு சினிமா விழாவில் பெண்களுடன் காங்கிரஸ் எம்எல்ஏ அம்பரீஷ் நடனமாடிய வீடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சை வெளியாகியுள்ளது.

கர்நாடக சட்டசபையில் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் நிலையில் அவர் அதில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத் தொடரில் பங்கேற்காமல் அவர் ஒரு இசை வெளியீட்டு விழாவில் பெண்களுடன் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

 எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

அதில் அம்பரீஷ் பல பெண்களுடன் நடனமாடி ஜாலியாக பொழுதை கழிக்கும் வண்ணமாக உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 அமைச்சர் அலுவலகத்துக்கு கூட வந்ததில்லை

அமைச்சர் அலுவலகத்துக்கு கூட வந்ததில்லை

இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் குண்டூர் ராவ் கூறுகையில், அவர் வேறு மாதிரியான அரசியல்வாதி. அவர் மத்திய அமைச்சராக இருந்தபோதும் அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக அமைச்சர் அலுவலகத்துக்கு வரமாட்டார்.

 பெரும்பாலும் வருவதில்லை

பெரும்பாலும் வருவதில்லை

அவர் உணர்ச்சிமிக்க மாறுபட்ட அரசியல்வாதி. எனவே இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சப்பைக்கட்டுகிறார் குண்டூர் ராவ். மாண்டியா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான அம்பரீஷ் இதுவரை நடந்துள்ள 218 நாள்களில், 14 கூட்டத் தொடர்களில் அவர் வெறும் 4 நாள்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து அவர் வருவதில்லை. இதுகுறித்து சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன.

 உடல்நலம் பாதிக்கிறதாம்

உடல்நலம் பாதிக்கிறதாம்

அதற்கு கூட்டத் தொடரில் உள்ள ஏசி தனது உடலுக்கு ஒத்து கொள்ளவில்லை என்றும் இதனால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது என்றும் சாக்கு தெரிவிக்கிறார்.

தொடர்ந்து புறக்கணிப்பு

இசை வெளியீட்டு விழாவில் ஏசி இல்லாமலா இருந்திருக்கும். வேண்டுமென்றே திட்டமிட்டு கூட்டத் தொடரை புறக்கணிக்கிறார் என்று எதிர்க்கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka Congress MLA Ambareesh has yet again courted controversy by skipping the Assembly session in Belgavi. Ambareesh was seen dancing at a music launch in Bengaluru as he skipped the Assembly session on Tuesday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற