For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகத்தில் பாஜக பலம் பெறுகிறது.. ஆனால் காங்.கே வெல்லும்.. எதியூரப்பாவுக்கு எதிர்ப்பு அதிகம்!

|

டெல்லி: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகத்தில் பாஜகவுக்கு 2வது இடமே கிடைக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் 6 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பல மடங்கு அதன் செல்வாக்கு உயர்ந்துள்ளதாம். ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அங்கு முதலிடம் கிடைக்கிறது. 3வது இடத்திற்குத் தள்ளப்படுகிறது தேவெ கெளடாவின் மதச்சா்பற்ற ஜனதாதளம்.

மொத்தம் 28 இடங்களைக் கொண்டுள்ள கர்நாடகத்தில், காங்கிரஸுக்கு 10 முதல் 18 இடங்கள் வரை கிடைக்குமாம்.

பாஜகவுக்கு 6 முதல் 10 இடங்களில் வெற்றி கிடைக்கலாமாம். மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 4 முதல் 8 இடங்கள் வரை கிடைக்கும் என்று லோக்நிதி -ஐபிஎன் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பரவலாக எதியூரப்பா மீண்டும் பாஜகவுக்கு வந்ததை அக்கட்சியினரில் பலரே விரும்பவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

செல்வாக்கு குறைந்தாலும் வலுவாகவே இருக்கும் கை

செல்வாக்கு குறைந்தாலும் வலுவாகவே இருக்கும் கை

ஆறு மாதங்களுக்கு முன்பு காங்கிரஸுக்கு இருந்த பாப்புலாரிட்டி தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் அக்கட்சிக்கு இந்த லோக்சபா தேர்தலில் 42 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று சர்வே கூறுகிறது.

பாஜகவுக்கு நல்ல முன்னேற்றம்

பாஜகவுக்கு நல்ல முன்னேற்றம்

அதேசமயம், பாஜகவுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சிக்கு 32 சதவீத வாக்குகள் கிடைக்குமாம். ஆறு மாதங்களுக்கு முன்பு அதன் செல்வாக்கு 12 சதவீத அளவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கெளடா கட்சிக்கு 18 சதவீதம்

கெளடா கட்சிக்கு 18 சதவீதம்

தேவெ கெளடாவின் கட்சிக்கு 18 சதவீத வாக்குகள் கிடைக்கலாம். ஆம் ஆத்மிக்கு 3 சதவீத வாக்குகள் கிடைக்குமாம்.

கடந்த தேர்தல் நிலவரம்

கடந்த தேர்தல் நிலவரம்

கடந்த 2009 லோக்சபா தேர்தலின்போது பாஜக 19 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், தேவெ கெளடா கட்சிக்கு 3 இடத்திலும் வெற்றி கிடைத்தது.

எதியூரப்பா வருகைக்கு எதிர்ப்பு

எதியூரப்பா வருகைக்கு எதிர்ப்பு

அதேசமயம், இந்தக் கருத்துக் கணிப்பின்போது பொதுவாக கருத்து தெரிவித்தவர்களில் பலரும் பாஜகவுக்கு மீண்டும் எதியூரப்பா திரும்பியதை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் எதியூரப்பாவின் மறு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 32 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்குள் எதியூரப்பாவுக்கு நல்ல வரவேற்பு

பாஜகவுக்குள் எதியூரப்பாவுக்கு நல்ல வரவேற்பு

அதேசமயம் தீவிர பாஜகவினரில் 53 சதவீதம் பேர் எதியூரப்பா வருகையை ஆதரித்துள்ளனர். 37 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

லிங்காயத்துக்களிடையே எதியூரப்பாவுக்கு எதிர்ப்பு

லிங்காயத்துக்களிடையே எதியூரப்பாவுக்கு எதிர்ப்பு

எதியூரப்பா சார்ந்த லிங்காயத் சமுதாயத்தினர் மத்தியில்தான் அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்தது ஆச்சரியகரமானது. அதாவது 51 சதவீதம் பேர் எதியூரப்பா தேவையில்லை என்று கூறியுள்ளனர். 30 சதவீதம் பேரே ஆதரித்துள்ளனர்.

நம்பலாம் என்று சொன்னவர்கள் 43 சதவீதம் பேர்

நம்பலாம் என்று சொன்னவர்கள் 43 சதவீதம் பேர்

ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருப்பார் எதியூரப்பா என்று சொன்னவர்கள் 43 சதவீதம் பேர். 29 சதவீதம் பேர் அவர் கட்சிக்கு சொத்தாக இருப்பார் என்று கூறியுள்ளனர்.

காங். நலத் திட்டங்களுக்கு பரவலாக வரவேற்பு

காங். நலத் திட்டங்களுக்கு பரவலாக வரவேற்பு

கர்நாடக காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள் மக்களை பரவலாக சென்றடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக அன்ன பாக்யா மற்றும் ஷீரா பாக்யா ஆகிய இரு திட்டங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

பாஜகவுக்கு காங்கிரஸ் அரசு பெட்டர்

பாஜகவுக்கு காங்கிரஸ் அரசு பெட்டர்

46 சதவீதம் பேர் பாஜக அரசை விட காங்கிரஸ் அரசு நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். 21 சதவீதம் பேரே பாஜக அரசு பெட்டர் என்று கூறியுள்ளனர்.

தனியாக நில்லுங்க கெளடரே...

தனியாக நில்லுங்க கெளடரே...

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 10ல் ஆறு பேர், தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் தேர்தலில் தனித்து நிற்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

காங் கூட்டணிக்கு 40 சதவீத ஆதரவு

காங் கூட்டணிக்கு 40 சதவீத ஆதரவு

அதேசமயம், காங்கிரஸுடன் கெளடா கூட்டணி அமைக்க வேண்டும் என்று 40 சதவீதம் பேரும், 35 சதவீதம் பேர் பாஜக கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காங். அரசு குறித்து ஹேப்பியோ ஹேப்பி..

காங். அரசு குறித்து ஹேப்பியோ ஹேப்பி..

ஒட்டுமொத்தமாக 71 சதவீதம் பேர் காங்கிரஸ் அரசு குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 24 சதவீதம் பேரே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சித்தராமையா டாப்

சித்தராமையா டாப்

முதல்வர் சித்தராமையா சிறந்த முதல்வர் என்று 76 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 20 சதவீதம் பேரே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதிருப்தியும் கணிசமாக இருக்கே...

ஆனால் அதிருப்தியும் கணிசமாக இருக்கே...

அதேசமயம், மீண்டும் காங்கிரஸுக்கு வாய்ப்பளிக்கலாம் என்று 36 சதவீதம் பேரே தெரிவித்துள்ளனர். 34 சதவீதம் பேர் கூடாது என்று கூறியுள்ளது, காங்கிரஸுக்கு கவலை அளிக்கும் விஷயமாகும்.

இங்கேயும் நாறுதப்பா ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு

இங்கேயும் நாறுதப்பா ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு

பெரும்பாலான மாநிலங்களில் இருப்பதைப் போலவே கர்நாடகத்திலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு இல்லை. இங்கு 52 சதவீதம் பேர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மோடிக்கு ஆதரவு

மோடிக்கு ஆதரவு

கர்நாடகத்திலும் மோடி பிரதமராகவே ஆதரவு காணப்படுகிறது. அதாவது 28 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 19 சதவீத ஆதரவு காணப்படுகிறது. சோனியா காந்திக்கு 14 சதவீத ஆதரவு உள்ளது. கெளடாவுக்கு 8 சதவீதம் பேர் ஜே போட்டுள்ளனர்.

English summary
In another battleground state of Karnataka, the ruling Congress is still ahead of the Bharatiya Janata Party (BJP) and the Janata Dal Secular (JDS). With 28 seats in the Lok Sabha, Karnataka is expected to play an important role in the next elections. According to the projections provided by Chennai Mathematical Institute's Director Professor Rajeeva Karandikar, Congress will win 10-18 seats, BJP 6-10 and JDS 4-8.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X