அம்மா, இன்று நியூஸ் சேனலை பாருங்க: கெஜ்ரிவால் மீது மை வீசும் முன்பு தாயிடம் தெரிவித்த பாவனா
டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது மை வீசும் முன்பு இன்று செய்தி சேனலை பார்க்குமாறு பாவனா அரோரா தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த பாவனா அரோரா(28) என்ற பட்டதாரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீசியதற்காக கைது செய்யப்பட்டார். ராமா விஹாரில் உள்ள ரோஹினி செக்டார் 39ல் பெற்றோர், சகோதர, சகோதரிகளுடன் வசித்து வரும் பாவனா ஆம் ஆத்மி சேனா உறுப்பினர் ஆவார்.

இந்நிலையில் மை வீச்சு சம்பவம் பற்றி பாவனாவின் தாய் லட்சுமி தேவி கூறுகையில்,
நான் கிளம்புகிறேன். இன்று செய்தி சேனலை கண்டிப்பாக பார்க்கவும் என்று கூறிவிட்டு பாவனா சென்றார். ஆனால் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை என்னிடம் தெரிவிக்கவில்லை என்றார்.
பாவனாவின் தம்பி புனீத் அரோரா(26) கூறுகையில்,
என் அக்கா ஒரு சமூக ஆர்வலர். யாருக்காவது அநீதி நடந்தால் அவரால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அவர் கல்லூரியில் படிக்கையில் அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அவர் ஆம் ஆத்மி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் ஆம் ஆத்மி சேனாவில் சேர்ந்தார். கட்சியில் அவர் செய்வது பற்றி அவரும் கூறியது இல்லை, நாங்களும் கேட்டது இல்லை. அவர் எந்த தவறும் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை தான்.
என் அக்காவுக்காக போராடுவோம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications