அந்த அரபிக் கடலோரம்.. அலை வந்து மோதியபோதும்.. கடமை தவறாத நிருபர்... வைரல் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடல் அலைகள் சீற்றத்துடன் ஆர்பரித்து வருகின்றன. கடற்கரையோரம் வசிக்கும் மக்களின் பாதிப்பு பற்றி செய்தி அளித்துக்கொண்டிருந்த நிருபர் அனீஷ் மீது அலைகள் மோதிய போதும் தனது பணியை அவர் சிறப்பாக முடித்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் ஆலப்புழையில் கடற்கரையோரம் வசித்தவர்களின் வீடுகளை கடல் அலைகள் அடித்துச் சென்றன. வீடுகளை இழந்தவர்கள் உண்ண உணவின்றி மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.

Kerala channel reporter viral video

வீடுகளை இழந்தவர்கள் படும் துயரம் பற்றி மக்களுக்கு நேரடியாக தெரிவிப்பதற்காக நியூஸ் 18 கேரளா தொலைக்காட்சி நிருபர் அனிஷ், ஆலப்புழை கடற்கரைப்பகுதிக்குச் சென்றார்.

அங்கே நேரடியாக கடல் அலையின் பின்னணியில் இருந்து அவர் பேசிக்கொண்டிருக்கும் போது ஆர்பரித்த அலை அவரது குடையை தாக்கியது. அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் தனது பணியை முடித்தார் நிருபர். இந்த வீடியோ தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த மாவட்ட ஆட்சியர் அந்த பகுதிக்கு வந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
On Wednesday, Anish was reporting on the turbulent sea and the havoc it has been causing in Alappuzha, hit by a massive sea wave is going viral. The houses in that area got destroyed by the sea and people are now homeless and hungry.
Please Wait while comments are loading...