For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளப் பாதிப்புக்கு தமிழகமே காரணம்... கேரள அரசு விஷமத்தனம்!

Google Oneindia Tamil News

டெல்லி: கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புக்கு தமிழக அரசும் ஒரு காரணம் என்று விஷமத்தனமாக கூறியுள்ளது கேரள அரசு.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கும் வழக்கில் அது நேற்று உச்சநீதிமன்றத்தில் ஒரு அபிடவிட்டை தாக்கல் செய்தது. அதில்தான் இவ்வாறு தமிழகத்தின் மீது பழியைத் தூக்கிப் போட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டதால் இடுக்கி அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விட வேண்டியதாயிற்று என்றும் பச்சைப் பொய்யைக் கூறியுள்ளது. ஆனால் இதே கேரள அரசுதான் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க கோரி ஒற்றைக் காலில் நிற்கிறது.

Kerala govt blames TN govt for its flood

முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறந்து விட்டால் அது இடுக்கி அணைக்குத்தான் போகும். அப்படி இருக்கும்போது அந்தப் பக்கமும் பேசுகிறது, இந்தப் பக்கமும் பேசுகிறது கேரளா.

நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது கேரளா தரப்பில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கேரள அரசு கூறியுள்ளதாவது:

100 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் நிகழ்ந்த பெருவெள்ளத்தால் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. கேரளாவில் ஏற்கனவே மழை பெய்து வந்த நிலையில், இந்த மாதம் பெருமழை பெய்தது.

Kerala govt blames TN govt for its flood

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி அதிகமாகவும், அணையில் நீரை தேக்கி வைக்கும் திறன் குறைவாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து அதிகமானதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அதை ஏற்கவில்லை.

கடந்த 15-ந் தேதி நள்ளிரவில் முல்லைப்பெரியாறு அணையின் மதகுகள் மூலம் திடீரென்று இடுக்கி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இடுக்கி அணையில் இருந்தும் நீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்துக்கு கேரள அரசு உள்ளானது. இதன் காரணமாக கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய உடனேயே, தமிழகம் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீரை திறந்து விட்டு இருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டு இருக்காது. வெள்ளசேதம் ஏற்பட்டதற்கு தமிழகம் திடீரென்று தண்ணீரை திறந்துவிட்டதும் ஒரு காரணம் ஆகும் .

இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் தலைமையில் இரு மாநிலங்களின் நீர்ப்பாசனத்துறை செயலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு ஒரு மேற்பார்வை குழு அமைக்கப்பட வேண்டும். பெருவெள்ளம் ஏற்படும் போது உடனடியாக தண்ணீர் திறந்து விடுவது பற்றிய முடிவை எடுக்கும் அதிகாரத்தை இந்த குழுவுக்கு வழங்க வேண்டும்.

மேலும் இந்த மேற்பார்வை குழுவின் கீழ் இயங்கும் வகையில் மேலாண்மை குழு ஒன்றையும் அமைக்க வேண்டும். அந்த மேலாண்மை குழு முல்லைப் பெரியாறு அணையின் அன்றாட நீர்வரத்து, நீர்மட்ட அளவு, நீர் திறப்பு ஆகியவை குறித்த நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும்.

இந்த மேலாண்மை குழு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் அல்லது மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இரு மாநிலங்களின் தலைமை பொறியாளர்கள் அல்லது மேற்பார்வை பொறியாளர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்படவேண்டும் என்று கூறியுள்ளது.

English summary
Kerala govt has blamed TN govt for its flood in the state due to the timely opening of water from Mullaiperiyar dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X