நடிகர் திலீப் ஜாமின் வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது!- கேரள உயர் நீதிமன்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பாவனா கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் திலீப்பின் ஜாமின் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

பாவனாவை கடத்தி, மானபங்கப்படுத்திய வழக்கில் நடிகர் திலீப் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமின் வழங்கக் கோரி, திலீப்பின் வழக்கறிஞர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Kerala HC denies to hear Dileep's bail petition as Urgent case

இந்த மனுவை ஜூலை 20 ம் தேதி விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார். அதுவும் எதிர்த்தரப்பு வாதத்தை முதலில் கேட்பதாகவும், அதன் பிறகே திலீப் தரப்பைக் கேட்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்குமாறு கோரியதற்கு, நீதிபதி மறுப்புத் தெரிவித்துவிட்டார்.

ஜூலை 25 வரை திலீப்புக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் அவர் ஜாமினில் வெளி வர முடியாது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Kerala High Court has declined to hear Actor Dileep's bail petition as urgent plea
Please Wait while comments are loading...