'கொலீஜியம்' முறையை மக்கள் விரும்பவில்லை.. மாற்றணும்.. மத்திய சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜு பரபர கருத்து
காந்திநகர்: உச்சநீதிமன்ற நீதிபதிகளை 'கொலீஜியம்' எனும் அமைப்பு நியமிப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு கூறியுள்ளார்.
கடந்த 1993ம் ஆண்டு முதல் நீதிபதிகளை 'கொலீஜியம்' அமைப்புதான் நியமித்து வருகிறது. சமீப காலமாக இந்த அமைப்பு முறை குறித்து பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் அமைச்சர் கிரன் ரிஜிஜு தற்போது இக்கருத்தை தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ஒருவரே வெளிப்படையாக 'கொலீஜியம்' அமைப்பு குறித்து கருத்து தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலுவையில் வழக்குகள்
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக இருக்கும் இந்தியாவில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிக அளவில்தான் இருக்கிறது. அதாவது 2022ம் ஆண்டு மே மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் சுமார் 4.7 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 87.4% துணை நீதிமன்றங்களிலும், 12.4% உயர் நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன.

நீதிபதிகள் பற்றாக்குறை
மேலும், 1,82,000 வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. அதேபோல கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வழக்கு நிலுவையில் தேங்குவது 27% வரை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நீதிபதிகள் பற்றாக்குறை பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நீதிபதிகளை 'கொலீஜியம்' எனும் அமைப்பு நியமிப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு கூறியுள்ளார்.

அமைச்சர் உரை
மேலும், "அரசியலமைப்புச் சட்டத்தின்படி நீதிபதிகளை நியமிப்பது அரசின் வேலை" என்றும் அவர் கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வார இதழான 'பாஞ்சஜன்யா' இதழ் நேற்று முன்தினம் (அக்.17) 'சபர்மதி சம்வாத்' எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்த ரிஜிஜு மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்துள்ளார். இதில் அவர் பேசியதாவது, "கடந்த 1993 முன்பு வரை நீதிபதிகள் நியமனம் இந்திய தலைமை நீதிபதியுடன் ஆலோசிக்கப்பட்டு சட்ட அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டனர்.

குற்றச்சாட்டுகள்
இந்த நடைமுறை மத்திய அரசுக்கு உதவியாக இருந்தது. எனவே தற்போது 'கொலீஜியம்' முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த நியமன முறையின்படி நீதிபதிகளே, நீதிபதிகளை நியமித்துக்கொள்கின்றனர். இதன் மூலம் தெரிந்தவர்களை, நன்கு பரிட்சியமானவர்களை நியமிப்பது இயல்பானதுதான். சக நீதிபதிகள் நியமனத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி மேலெழுகின்றன. ஆனால் 1993க்கு முன்னர் இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் ஏதும் வரவில்லை.

எதிர்ப்பு
மட்டுமல்லாது, நீதிபதிகள் அடுத்த நீதிபதிகளை நியமிப்பதிலேயே தங்களின் அதிகப்படியான நேரத்தை செலவழிக்கிறார்கள். நீதிபதிகளுக்கு பிரதான வேலை என்பது நீதி வழங்குவது மட்டும்தான்" என்று ரிஜிஜு கூறியுள்ளார். இது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேலை மத்திய அரசு இந்த நியமனத்தை கையில் எடுத்தால் அரசின் ஆதரவாளர்கள் நீதித்துறையை ஆக்கிரமித்து விடுவார்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications