மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் உள்ளார்: உறுதிப்படுத்திய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் "இயல்புநிலை திரும்பிய பிறகு அவர் விரும்பிய இடத்துக்கு அனுப்பி வைப்போம்," என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை 61 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 41 வாகனங்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாகவும், 136 வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
- இலங்கை வரலாறு: மஹிந்த பிரதமரான 'அரசியல்' - ராஜபக்ஷக்கள் வளர்ந்த கதை
- மனித உரிமை ஆர்வலர் மஹிந்த: ராஜபக்ஷக்கள் வளர்ந்த கதை
- தேசியத் தலைவராக உருவெடுத்த மஹிந்த - ராஜபக்ஷக்கள் வளர்ந்த கதை
- மே 2009, 2022: மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் உச்சமும் வீழ்ச்சியும்
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டின் ராணுவமும் நாட்டிற்கு வரவழைக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எந்த சூழ்நிலையிலும் நாட்டில் ராணுவ ஆட்சி வராது என்றும் அதற்கான அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் கமல் குணரத்ன தெரிவித்தார்.
(மேலும் அவர் கூறியது என்ன என்பதை தொடர்ந்து இந்தப் பக்கத்தில் மேம்படுத்துகிறோம். இணைந்திருங்கள். )
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்