For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மமதா பானர்ஜியின் கூட்டணி அழைப்பு- இடதுசாரிகள் நிராகரிப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கூட்டணி சேர திரிணாமுல் காங்கிரஸ் தயார் என்ற முதல்வர் மமதா பானர்ஜியின் விடுத்த அழைப்பை இடதுசாரிகள் நிராகரித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்குவங்க சட்டசபை தேர்தலில் இடதுசாரிகளை வீழ்த்தி மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடித்தார்.

Left Bloc Rules Out Alliance With Mamta Banerjee

தற்போது பாஜக மத்தியில் ஆட்சியைப்பிடித்த பின் அந்த மாநிலத்தில் பாஜக வளரும் நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலில் நேற்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அரசியலில் எந்த கட்சியும் தீண்டத்தகாதது அல்ல, இடதுசாரிகளுடன் கூட்டணி வைக்க தயார் என்று மமதா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மமதாவின் அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா வளர்ச்சியை கருத்தில் கொண்டு மமதா இது போன்று கூறுகிறார். பாரதிய ஜனதாவை நாங்கள் நேரடியாகவே எதிர்ப்போம் இதனால் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரும் பேச்சுக்கே இடம் இல்லை என்றார்.

English summary
The left bloc parties have ruled out an alliance with Mamta Banerjee's Trinamool Congress, a day after she suggested she was open to an coalition with a party that she has opposed for most of political career.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X