For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'நோ' ரயில்வே பட்ஜெட்...ரயில்கள் இயக்க, பராமரிக்க தனியார்மயம்... அதிர வைக்கும் புதிய பரிந்துரைகள்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பயணிகள் ரயில்களை இயக்க தனியாருக்கு பரிந்துரை அளிக்க வேண்டும்; ரயில்வே பட்ஜெட் என தனியாக தேவையில்லை என்று மத்திய அரசுக்கு பொருளாதார வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

Let private players run and maintain passenger trains, panel suggests

ரயில்வே துறையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய திட்ட குழுவுக்கு மாற்று அமைப்பான நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் டெப்ராய் தலைமையில் 8 பேர் கொண்ட குழு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது.

இக்குழு தமது பரிந்துரையை மத்திய அரசிடம் அளிக்க இருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முக்கிய அம்சங்கள்:

  • பயணிகள் ரயில்களை இயக்கவும், பராமரிக்கவும் தனியாருக்கு அனுமதி வழங்க வேண்டும்
  • ரயில் பெட்டிகள், என்ஜின்கள் போன்றவற்றை தயாரிக்கும் பணிகளிலும் தனியாரை அனுமதிக்கலாம்.
  • ரயில்களில் உணவு பொருட்கள் விற்பனைக்கு தனியாருக்கு உரிமம் வழங்கலாம்
  • சரக்குகளை கையாளுவதற்கான ரயில் பெட்டிகளை குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம்.
  • ரயில்வே துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
  • ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பொது பட்ஜெட்டில் இடம்பெறச் செய்யலாம்.
  • ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே மருத்துவமனைகள், ரயில்வே பள்ளிகள் போன்றவற்றின் நிர்வாகம் ரயில்வே துறையில் இருந்து பிரிக்க வேண்டும்
  • ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்.
  • என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் அளிக்கப்பட இருக்கிறது. ரயில்வே துறையில் தனியாரை களமிறக்கும் இந்த பரிந்துரைகள் தொழிற்சங்கங்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
English summary
Indian Railways is on the threshold of dramatic changes. A government panel, mandated to suggest ways to overhaul the railways, has recommended the entry of private players to run passenger trains. While there was talk of private sector role in freight, this is the first time a move is being made to bring it in the running of passenger trains.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X