For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நில ஆவணத்துடன் ஆதார் எண் இணைப்பு... மாநில அரசுக்கு மத்திய அரசு எந்த கடிதமும் அனுப்பலையாம்

நில ஆவணங்களோடு ஆதார் எண்ணை உரிமையாளர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளியான தகவலை போலி என்று தெரியவந்துள்ளது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நில ஆவணங்களோடு ஆதார் எண்ணை உரிமையாளர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண் இணைக்காதவர்கள் மீது பினாமி பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக சற்று நேரத்திற்கு முன்பாக ஊடகங்களில் தகவல் வெளியானர். அதில் முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

Link your land records with Aadhaar, else face action under Benami Act

• நில ஆவணங்களோடு ஆதார் எண்ணை உரிமையாளர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும்

• ஆதார் எண் இணைக்காவிடில் பினாமி பணபரிவர்த்தனைக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

• 1950ம் ஆண்டு முதலான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்

• ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்

• மத்திய அரசின் மானியங்களை பெற ஆதார் எண் அவசியம் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

• மதிய உணவு முதல் வங்கிக்கணக்கு வரை ஆதார் எண் இணைக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

• இந்த நிலையில் ரியல்எஸ்டேட் துறையில் அதிகம் கறுப்பு பணம் புழக்கம் உள்ளதை கருத்தில் கொண்டு, நிலம் வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் தங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டது.

அது உண்மையல்ல போலி கடிதம்

இதனிடையே மத்திய அரசு அனுப்பியதாக வெளியான கடிதம் போலியானது என்று தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பெயரை வைத்து யாரோ விஷமம் செய்திருப்பதாகவும், போலி கடிதத்தை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

English summary
The letter attributed to Cabinet Secretariat on digitalisation of Land records and linking the same to Aadhaar numbers going viral has beendeemed fake by the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X