For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாநிலவாரியாக கட்சிகள் வென்ற இடங்கள் இது தான்!

By Siva
|

சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் மாநில வாரியான முடிவுகளை பார்ப்போம்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 12ம் தேதி வரை 9 கட்டமாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 16ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேரத்லில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியான தேர்தல் முடிவுகளை பார்ப்போம்.

தெலுங்கானா

தெலுங்கானா

தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 இடங்களில் பாஜக, தெலுங்கு தேசம் கூட்டணி 2 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 11 இடங்களையும். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

சீமாந்திரா

சீமாந்திரா

சீமாந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் பாஜக, தெலுங்கு தேசம் கூட்டணி 17 தொகுதிகளையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 2 தொகுதிகளில் பாஜகவும், காங்கிரஸும் தலா 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

அஸ்ஸாம்

அஸ்ஸாம்

அஸ்ஸாமில் உள்ள 14 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

பீகார்

பீகார்

பீகாரில் மொத்தம் உள்ள 40 இடங்களில் பாஜக 22 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், லோக் ஜன் சக்தி 6 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர்

சத்தீஸ்கரில் உள்ள 11 தொகுதிகளில் பாஜக 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கோவா

கோவா

கோவாவில் மொத்தம் உள்ள 2 தொகுதிகளிலும் பாஜக தான் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத்

குஜராத்

மோடி முதல்வராக உள்ள குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது.

ஹரியானா

ஹரியானா

10 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் பாஜக 7 இடங்களையும், காங்கிரஸ் 1 இடத்தையும், இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 நாடாளுமன்ற தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள 6 தொகுதிகளில் பாஜக மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட்

14 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்டில் பாஜக 12 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 இடங்களில் பாஜகவுக்கு 17, காங்கிரஸுக்கு 9 மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன.

கேரளா

கேரளா

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி 12 தொகுதிகளையும், இடதுசாரி ஜனநாயக முன்னணி 8 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

29 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் பாஜக 27 தொகுதிகளையும், காங்கிரஸ் 2 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.

மகாரஷ்டிரா

மகாரஷ்டிரா

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பாஜக 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், சிவசேனா 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

மணிபூர்

மணிபூர்

மணிபூரில் உள்ள 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

மேகாலயா

மேகாலயா

மோகலயாவில் உள்ள 2 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் கிடைத்துள்ளது.

மிசோரம்

மிசோரம்

மிசோரத்தில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

நாகாலாந்து

நாகாலாந்து

நாகாலாந்தில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதியில் நாகா மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

ஒடிஷா

ஒடிஷா

ஒடிஷாவில் மொத்தம் உள்ள 21 இடங்களில் பிஜு ஜனதாதளத்திற்கு 20 இடங்களும், பாஜகவுக்கு 1 இடமும் கிடைத்துள்ளது.

பஞ்சாப்

பஞ்சாப்

பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளில் பாஜக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி மற்றும சிரோமணி அகாலிதளம் ஆகியவை தலா 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிளிலும் பாஜக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

சிக்கிம்

சிக்கிம்

சிக்கிமில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதியில் சிக்கிம் ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளிலும், பாஜக மற்றும் பாமக தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

திரிபுரா

திரிபுரா

திரிபுராவில் உள்ள 2 நாடாளுமன்ற தொகுதிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியுள்ளது.

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 71 தொகுதிகளிலும், காங்கிரஸ் மற்றும் அப்னா தளம் தலா 2 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

உத்தரகண்ட்

உத்தரகண்ட்

உத்தரகண்டில் உள்ள 5 தொகுதிகளிலுமே பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் உள்ள 42 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் 34 இடங்களையும், பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

அந்தமான், நிகோபார் தீவுகள்

அந்தமான், நிகோபார் தீவுகள்

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதியை பாஜக கைப்பற்றியுள்ளது.

சன்டிகர்

சன்டிகர்

சன்டிகரில் உள்ள ஒரு தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தாத்ரா நகர் ஹவேலி

தாத்ரா நகர் ஹவேலி

தாத்ரா நகர் ஹவேலியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதியை பாஜக கைப்பற்றியுள்ளது.

தாமன் அன்ட் தையு

தாமன் அன்ட் தையு

தாமன் அன்ட் தையுவில் உள்ள ஒரு இடத்தை பாஜக கைப்பற்றியுள்ளது.

டெல்லி

டெல்லி

டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிளிலும் பாஜக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

லட்சத்தீவு

லட்சத்தீவு

லட்சத்தீவில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

புதுவை

புதுவை

புதுவையில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

English summary
Above is how the parties fared in the 2014 Lok Sabha election in various states and Union Territories.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X