"என் ஏரியாவில் ரெய்டு நடத்துனா தலைகீழா தொங்க விட்ருவேன்” அதிகாரியை மிரட்டிய அமைச்சர்.. ஆடியோ.. பரபர!
போபால் : அரசு அதிகாரியை, தலைகீழாக கட்டித் தொங்க விடுவேன் என அமைச்சர் போனில் மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இங்கு இல்லை, மத்திய பிரதேசத்தில்.
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அரசு அதிகாரிகள் மீது முதல்வர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அவரது அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சராக இருக்கும் ராம்கேலாவன் படேல், அரசு அதிகாரியை போனில் மிரட்டியுள்ளார்.
உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரியை போனில் அழைத்து, உன்னை தலைகீழாக கட்டி தொங்க விடுவேன் என அவர் மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக அரசு
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. கடமையைச் செய்யத் தவறும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரித்து வருகிறார். அறிவிப்போடு நிற்காமல், சமீபத்தில் ஒரு அரசு விழாவில் வைத்து சில அதிகாரிகளை, சஸ்பெண்டும் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து பல அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,

பாஜக அமைச்சர்
இது ஒருபுறமிருக்க, ம.பி முதல்வரின் உத்தரவுக்கு முரணாக, "என் ஏரியாவில் சோதனை நடத்தக்கூடாது" என பாஜக அமைச்சர் ஒருவர் அரசு அதிகாரியை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சராக பதவி வகித்து வருபவர் ராம்கேலாவன் படேல்.

தலைகீழா தொங்க விடுவேன்
அமைச்சர் ராம்கேலாவன் படேல், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியுடன் பேசுவதாக கூறப்படும் ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த ஆடியோவில், "என்னுடைய தொகுதியான அமர்பதானில் உள்ள கடைகளில் கலப்பட உணவு தொடர்பாக எவ்வித சோதனைகளும் நடத்தக் கூடாது. வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய கூடாது. மீறினால், உன்னை தலைகீழாக கட்டி தொங்க விடுவேன்" என அமைச்சர் அந்த அதிகாரியை மிரட்டுகிறார்.

பல் இளிக்கிறது
இந்த ஆடியோ வெளியாகி ம.பி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆடியோ தொடர்பாக அமைச்சர் ராம்கேலாவன் படேல், மிரட்டப்பட்டதாக கூறப்படும் அதிகாரி என யாருமே விளக்கம் அளிக்கவில்லை. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கை, அவரது அமைச்சரவை சகா ரூபத்தில் பல் இளிக்கிறது என காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications