For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடத் தேவையில்லை.. கிட்டக் கொண்டு போனாலே போதும்.. டங்னு அடிக்கும்.. சோசியல் டிஸ்டன்சிங் பெல்!

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் ஒரு கோயிலில் பெல்லை தொடாமலேயே அடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சோசியல் டிஸ்டன்சிங் பெல் என்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு தினமும் கொரோனா உச்சத்தை பெறுகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 8-ஆம் தேதி முதல் கோயில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் சமூக இடைவெளி கடைப்பிடிக்குமாறு கோயில் நிர்வாகங்களை மத்திய- மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் கோயில் என்றாலே அங்கு அடிக்கும் மணியோசைதான் நினைவுக்கு வரும்.

தினம் 1.5 ஜிபி இன்டர்நெட் வசதி.. நிறைய அவுட் கோயிங் அழைப்புகள்.. ஜியோ அதிரடி ஆஃபர்கள் தினம் 1.5 ஜிபி இன்டர்நெட் வசதி.. நிறைய அவுட் கோயிங் அழைப்புகள்.. ஜியோ அதிரடி ஆஃபர்கள்

பசுபதிநாதர் கோயில்

பசுபதிநாதர் கோயில்

அந்த மணியோசையை தினந்தோறும் ஏராளமானோர் அடிக்கக் கூடும். இவ்வாறு தொட்டு அடிக்கும் போது தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்திய பிரதேசத்தில் மண்ட்சாரில் உள்ள பசுபதிநாதர் கோயிலில் மணி அடிக்கலாம் , ஆனால் யாரும் தொடாமலேயே மணி அடிக்கும் வகையில் புதுமையான விஷயம் செய்யப்பட்டுள்ளது.

பிரார்த்தனை

பிரார்த்தனை

இது சமூக இடைவெளி மணி என அழைக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க சென்சாரை கொண்டு இயங்குகிறது. மணியின் கீழ் நின்றால் போதும் தானாகவே அடிக்கத் தொடங்கும். இதுகுறித்து 62 வயதான நஹ்ரூ கான் மேவ் கூறுகையில், மசூதிகளில் பிரார்த்தனைகளுக்கு (விடியற்காலையில் நடத்தப்படுவது) அனுமதி கிடைத்தவுடன் கோயில்களிலும் மக்கள் மணி அடிக்கவும் அனுமதிக்கப்படுவார்களே.

செலவு

செலவு

என்ன செய்வது என யோசித்தேன். அப்போது என் மனதில் தோன்றியது சென்சாரை கொண்டு இயங்கும் மணி. இதனால் இந்தூர் சென்றேன், அங்கு சென்சாரை வாங்கினேன், எனது சொந்த நிறுவனத்திலேயே தயார் செய்தேன். இதை தயாரிக்க எனக்கு ரூ 6000 செலவானது. பின்னர் கோயிலுக்கு இந்த மணியை கொடுத்துவிட்டேன் என்றார்.

முதல்வர்

முதல்வர்

மத்திய பிரதேசத்தில் இதுவரை கொரோனாவால் 10,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 440 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதுகுறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில் கொரோனா பரவலை தீவிரமாக தடுத்து வருகிறோம். ஒரு நாளைக்கு 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அன்றைய தினம் 200 பேர் வரை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள் என்றார்.

English summary
Madhya Pradesh temple has social distancing bell. But no need to touch the bell. It works with the help of sensor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X