Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிப்பூரில் வெற்றிக் கொடி நாட்டும் பாஜக..டஃப் கொடுக்குமா காங்கிரஸ்..பல்வேறு நிறுவனங்களின் கணிப்புகள்

Subscribe to Oneindia Tamil

இம்பால் : மணிப்பூரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஜீ நியூஸ், ஏபிபி - சி ஓட்டர்ஸ், இந்தியா டுடே உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியும் குறிப்பிடத்தகுந்த இடங்களை பெறும் என கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 இடங்கள் உள்ள நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டும் நடைபெற்ற தேர்தலில் பாஜக 36.2% வாக்குகளுடன் 21 இடங்களில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் 35.1% வாக்குகளுடன் 28 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 7.1% வாக்குகளும், தேசிய மக்கள் கட்சி 5% வாக்குகளும் பெற்றது.

மணிப்பூர் தேர்தல்

மணிப்பூர் தேர்தல்

இந்நிலையில் 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவில் 78.03 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இரண்டாவது கட்டமாக 78.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, 22 தொகுதிகளில் 78.49 சதவீத வாக்குப்பதிவு சற்று அதிகமாக இருந்தது.

எக்ஸிட் போல் கணிப்புகள்

எக்ஸிட் போல் கணிப்புகள்

இந்நிலையில் மணிப்பூரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஜீ நியூஸ், ஏபிபி - சி ஓட்டர்ஸ், இந்தியா டுடே உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியும் குறிப்பிடத்தகுந்த இடங்களை பெறும் என கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளை தனித்தனியே பார்க்கலாம்..

ஜீ நியுஸ் கருத்து கணிப்பு

ஜீ நியுஸ் கருத்து கணிப்பு

ஜீ நியுஸ் கருத்து கணிப்பு படி மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 32 முதல் 38 இடங்களை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 12 முதல் 17 இடங்களையும், நாகலாந்து மக்கள் முன்னணி 3 முதல் 5 இடங்களையும், தேசிய மக்கள் முன்னணி 2 முதல் 4 இடங்களை கைப்பற்றும் எனவும், மற்றவை 2 முதல் 5 இடங்களில் வெற்றி பெரும் அந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்க்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏபிபி - சி வோட்டர்ஸ் கணிப்பு

ஏபிபி - சி வோட்டர்ஸ் கணிப்பு

ஏபிபி - சி வோட்டர்ஸ் கணிப்பு படி மணிப்பூரில் தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சி 23 முதல் 27 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வகையில் வலுவான நிலையில் உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸுக்கு (INC) 12-16 சட்டமன்ற இடங்கள் கிடைக்கும். தேசிய மக்கள் கட்சி 10-14 இடங்களையும், அதே நேரத்தில் பாஜகயின் கூட்டாணி கட்சியான நாகா மக்கள் முன்னணி 3-7 இடங்களைப் பெறலாம். மற்றவர்கள் 2-6 இடங்களைப் பெறலாம்

இந்தியா டுடே கருத்து கணிப்பு

இந்தியா டுடே கருத்து கணிப்பு

இந்தியா டுடே நிறுவனம் மணிப்பூர் மாநிலத்துக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பாஜக 33-43 இடங்களும், காங்கிரஸ் கட்சி 4-8 இடங்களும், என்.பி.பி- 4-8 இடங்களும், மற்ற கட்சிகள் 06-15 இடங்களையும் பிடிக்கும் என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

இந்தியா நியூஸ் ஜன்கிபாத் கருத்து கணிப்பு

இந்தியா நியூஸ் ஜன்கிபாத் கருத்து கணிப்பு


இந்தியா நியூஸ் ஜன்கிபாத் நிறுவனம் மணிப்பூர் மாநிலத்துக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை வெலியிட்டுள்ளது. அதில், பாஜக 23-28 இடங்களும், காங்கிரஸ் கட்சி 14-10 இடங்களும், தேசிய மக்கள் கட்சி 7-8 இடங்களும், நாகா கட்சி 8-5 இடங்களும், ஜேடியூ 5-7 இடங்களும், சுயேட்சைகள் 03-02 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியா டிவி - கிரவுண்ட் ஜீரோ ரிசர்ச் முடிவு

இந்தியா டிவி - கிரவுண்ட் ஜீரோ ரிசர்ச் முடிவு

இந்தியா டிவி - கிரவுண்ட் ஜீரோ ரிசர்ச் இணைந்து நடத்திய கருத்து கணிப்புகளின் படி பாஜக பாஜக 26 முதல் 31 வெல்லும் எனவும், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் 12 முதல் 17 இடங்களிலும், மற்றவை 11 முதல் 22 இடங்களில் வெல்லும் என கூறியுள்ளது.

நியுஸ் 18 பஞ்சாப் - பி மார்க் கணிப்பு

நியுஸ் 18 பஞ்சாப் - பி மார்க் கணிப்பு

நியுஸ் 18 பஞ்சாப் - பி மார்க் இணைந்து நடத்திய கருத்து கணிப்புகளின் படி பாஜக பாஜக 27 முதல் 31 வெல்லும் எனவும், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் 11 முதல் 17 இடங்களிலும், மற்றவை 11 முதல் 23 இடங்களில் வெல்லும் என கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+