For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவர் மனைவியை பலாத்காரம் செய்தால் அது குற்றமே இல்லை... அமைச்சர் பேசும் பேச்சைப் பாருங்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: கணவனால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை குற்றமாக கருத முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெண்கள், கணவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை குற்றமாக கருதும்படியாக இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் திட்டம் உள்ளதா என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குதல் தொடர்பான ஐநா குழு, இதுதொடர்பாக இந்தியாவிற்கு பரிந்துரை செய்துள்ளதா என்றும் அவர் வினவியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி, இந்தியாவில் திருமணம் புனிதமாக கருதப்படுவதால், பெண்கள் கணவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக கூறப்படுவது பொருத்தமாகாது என்று கூறினார்.

அதற்கு, கலாச்சாரம், மத நம்பிக்கை உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதனை குற்றமாக்கும் திட்டம் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

அப்போ மனைவி, கணவனைக் கொலை செய்தாலும் குற்றமில்லைதானே! பதில் சொல்லுங்க அமைச்சரே!

English summary
The concept of marital rape does not apply in India as marriage is treated as sacred here, the government said in Parliament today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X