ஜனாதிபதி தேர்தல்.. மீராகுமார் தோல்வி உறுதி.. நிதிஷ்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாட்னா: எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீராகுமார் தோல்வி அடைவது உறுதி என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

தற்போது குடியரசத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதி முடிவடைகிறது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

Meira Kumar Has Been Nominated Only To Lose: Nitish Kumar

பாஜக தனது வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது. அதே போன்று போன்று எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் இன்று தனது வேட்புமனுவை பிரதமர் மோடியின் முன்னிலையில் ராம் நாத் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் தோற்பதற்காகவே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

பாட்னாவில் ராஷ்டீரிய ஜனதா தள கட்சி சார்பில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது: எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள மீராகுமார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இதனால் பா.ஜ.க சார்பில் தேர்வான ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. பீகாரின் மகளான மீராகுமார் தோற்பதற்காகவே எதிர்கட்சி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Meira Kumarhas been nominated only to lose said bihar chief minister Nitish Kumar
Please Wait while comments are loading...