For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் எம்.ஜி. ரோடு, பிரிகேட் ரோட்டில் வைஃபையை யூஸ் பண்ணுங்க: 'பில்'லை அரசு கட்டும்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரின் முக்கிய வியாபார இடங்களான எம்.ஜி. ரோடு மற்றும் பிரிகேட் ரோட்டில் இலவச வை ஃபை திட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று துவக்கி வைத்துள்ளார்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரின் முக்கிய வியாபார இடங்களாக திகழ்வது எம்.ஜி. ரோடு மற்றும் பிரிகேட் ரோடு ஆகும். இந்த இரண்டு ரோடுகளிலும் மக்கள் இலவசமாக வை ஃபையை பயன்படுத்தும் திட்டத்தை மாநில அரசு இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இலவச வை ஃபை திட்டத்தை அம்மாநில முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.

ஃப்ரீ ஃப்ரீ

ஃப்ரீ ஃப்ரீ

இலவச வை ஃபை திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எம்.ஜி. ரோடு மற்றும் பிரிகேட் ரோட்டில் மக்கள் இலவச வை ஃபை மூலம் இமெயில்களை பார்க்கலாம், கூகுகள் செய்யலாம். இந்த திட்டம் சாந்திநகர், கோரமங்களா மற்றும் யஷ்வந்த்பூர் ஆகிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

ஐஎஸ்பி

ஐஎஸ்பி

தனியார் இன்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடரான ஐஎஸ்பி வை ஃபை சேவையை வழங்கும். இதற்கான பில்லை மாநில அரசு கட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் ஐடியா?

யார் ஐடியா?

இந்த இரண்டு சாலைகளிலும் இலவச வை ஃபை அளிக்கலாம் என்ற ஐடியாவை மாநில அரசுக்கு அளித்தது டி.வி. மோகன் பாய் தலைமையிலான கர்நாடக தகவல் மற்றும் தொலைத்தொடர்பு குழு தான்.

எப்படி பயன்படுத்தலாம்?

எப்படி பயன்படுத்தலாம்?

இலசவச வை ஃபையை பயன்படுத்த வேண்டுமானால் முதலில் இந்த இரண்டு சாலைகளில் ஏதேனும் ஒன்றுக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு உங்கள் பெயர் மற்றும் செல்போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். உடனே உங்களுக்கு ஒரு பாஸ்வேர்ட் அனுப்பி வைக்கப்படும். அதை வைத்து பதிவு செய்யப்பட்டதில் இருந்து 2 மணிநேரம் இலவச வை ஃபையை பயன்படுத்தலாம்.

மறுபடியும்

மறுபடியும்

இரண்டு மணிநேரத்திற்கு மேலாக வை ஃபையை பயன்படுத்தினாலோ அல்லது அந்த சாலையில் இருந்து வெளியே வந்துவிட்டு மீண்டும் அங்கு சென்றாலோ மறுபடியும் உங்கள் பெயர் மற்றும் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

English summary
MG Road and Brigade road, the main commercial hubs of Bangalore have become free wi-fi zones from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X