பாஜக மூத்த தலைவர் அத்வானி வீட்டில் திடீர் தீ.. பெரும் சேதம் தவிர்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி வீட்டில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் வீடு டெல்லி பிருத்விராஜ் சாலையில் உள்ளது. இன்று வீட்டில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Minor fire breaks out at L K Advani's residence

போலீசார் விரைந்து வந்து சில நிமிடங்களில் தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்கப்பட்டது. தீயணைப்புத் துறை உதவி இல்லாமலேயே உடனடியாக தீயை அணைத்ததால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minor fire breaks out senior bjp leader LK Advani's Prithviraj Road residence at delhi.
Please Wait while comments are loading...