16 வயது மாணவி பலாத்காரம்: டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் பலி
பதாவ்ன்: உத்தர பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது தலித் மாணவியை மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் அவர் பலியானார்.
உத்தர பிரதசே மாநிலம் பதாவ்னில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ் 1 மாணவி தண்ணீர் எடுத்து வர நீர் நிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றுள்ளார். அப்போது அவரை அவரது பக்கத்து வீட்டு வாலிபரும், அவருடைய நண்பர்கள் 2 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட மாணவி பரிதாபமாக பலியானார். இதற்கிடையே பக்கத்து வீட்டு வாலிபர் பிரசாந்த் அரோரா தனது நண்பர்களுடன் தலைமறைவாகிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை தேடி வருகிறார்கள்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!