ஸீயின் சீனாவை வீழ்த்திய மோடியின் இந்தியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோடி பிரதமரான பிறகு இந்தியாவின் வளர்ச்சி பல்வேறு துறைகளிலும் சீனாவை மிஞ்சியிருப்பதாக லண்டனில் உள்ள பேரிடர் கால கண்காணிப்பு நிறுவனமான அயோன் தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் சீன பொருளாதாரம் கடன் நெருக்கயால் வீழ்ச்சியை சந்தித்து வருவதாகவும் அயோன் கூறியுள்ளது.

லண்டனில் செயல்பட்டு வரும் பேரிடர் கால கண்காணிப்பு நிறுவனமான அயோன் அண்மையில் அரசியல் ஆபத்து என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டியிருந்தது. அதில் இந்தியா தனது பிராந்தியத்தில் பிரகாசமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கம் தற்போது நிதிநிலைக்கு ஏற்றவாறு மிகவும் தேவையான உள்கட்டமைப்பு சீர்த்திருத்தங்களை செய்து வருவதாக அந்த ஏஜென்ஸி கூறியுள்ளது. இந்த பொருளாதார முன்னேற்றங்கள் தொடர்ச்சியான உயர்மட்ட அரசியல் வன்முறையை முடக்குவதாகவும் அயோன் கூறியுள்ளது.

மீண்டு வரும் பொருளாதாரம்

மீண்டு வரும் பொருளாதாரம்

பணமதிப்பபிழப்பு நடவடிக்கையால் நவம்பர் மாதம் நாட்டில் சுமுகமானதாக இல்லை என்று கூறியுள்ள அயோன் தற்போது அதன் தாக்கம் மறைந்துபோய்விட்டது, பொருளாதாரம் மீண்டு வருகிறது என கூறியுள்ளது. ஆளும் பாஜக அரசு பல்வேறு தேர்தல்களில் வாக்களிக்கும் முன்னுரிமைகளை அதிகப்படுத்தி, சட்டசபையில் தனது நிலையை உயர்த்தியுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை

முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை

இதனால் பெரும்பான்மையை இன்னும் அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு சில உறுதியான நம்பிக்கையை கொண்டுவரும் முக்கிய சீர்திருத்தங்களை அரசு செயல்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளது.வெளிநாட்டு முதலீடு மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல், ஏற்றுமதி இறக்குமதி வரி குறைப்பு மற்றும் விலை கட்டுப்பாடுகளை அகற்றுவது போன்றவை பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

வீழ்ச்சியை சந்திக்கும் சீனா

வீழ்ச்சியை சந்திக்கும் சீனா

இதனிடையே சீனா அதிக நெகட்டிவான கருத்துக்களையே அயோன் கூறியுள்ளது. அதாவது சீனாவின் இறுக்கமான கொள்கையானது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வளர்ச்சியில் கடினதன்மையை உருவாக்கியிருப்பதாக கூறியுள்ளது. உள்நாட்டில், அரசாங்கம் அதிகாரத்தை பலப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கையை இறுக்கும் சீனா

கொள்கையை இறுக்கும் சீனா

2017 ஆம் ஆண்டிலும் 19 வது தேசிய காங்கிரசின் பொலிட்பீரோ அணுகுமுறையே தொடருவதாகவும் அயோன் கூறியுள்ளது. மேலும் கட்டமைப்பு உட்பட குறுகிய கால வளர்ச்சி உள்ளிட்டவையால் கடன் அதிகரித்திருப்பதால் சீனா தனது பொருளாதாரக் கொள்கையை இறுக்கி வருவதாகவும் அயோன் தெரிவித்துள்ளது.

சீனாவில் அரசியல் நெருக்கடி

சீனாவில் அரசியல் நெருக்கடி

இதன்மூலம் 2017 ம் ஆண்டில் கடும் பொருளாதார ஏற்ற இறக்கத்தை சீனா சந்தித்திருப்பது அம்பலமாகியிருப்பதாகவும் அந்த ஏஜென்ஸி நிறுவனம் கூறிள்ளது. இதனால் அரசியல் ரீதியிலான பிரச்சனைகள் உருவாகியிருப்பதகாவும் தெரிவித்துள்ளது.

வளர்ச்சியில் 4வது நாடு

வளர்ச்சியில் 4வது நாடு

உலக வங்கியின் தகவலின்படி 2017 ஆம் ஆண்டில் உலகின் நான்காவது மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரம் இந்திய பொருளாதாரமாகும் என்றும் கூறியுள்ளது. 2017 ம் ஆண்டு, இந்தியாவின் பொருளாதாரம் 7.2% ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் நீண்ட கால வளர்ச்சியைவிட சற்று அதிகம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி

உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டு வளர்ச்சி விகிதம் 1951 முதல் 2017 வரை சராசரியாக 6.12% ஆகவும், 2010 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 11.40% உயர்ந்து, நான்காவது காலாண்டில் மைனஸ் 5.20% என்ற குறைந்ததாகவும் கூறியுள்ளது. இந்திய பொருளாதாரம் பெரும் வளர்ச்சியை சந்தித்தாலும், அது மிகவும் போட்டித் தன்மையுடன் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

39வது நாடாக உயர்வு

39வது நாடாக உயர்வு

2016-17 ஆம் ஆண்டுகளில், உலகப் பொருளாதார அரங்கில் வெளியிடப்பட்ட உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையின் படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.52 புள்ளிகளாக இருந்தது. இது 10 ஆண்டுகளின் சராசரியாக இருந்த 4.33 புள்ளிகளை விட அதிகமாகும். இதன் மூலம் 138 நாடுகளை கொண்ட பட்டியலில் இந்தியா 39வது நாடாக உயர்ந்துள்ளது.

வீழ்ச்சியடைந்த சீனா

வீழ்ச்சியடைந்த சீனா

2016 ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.70% ஆக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சீனாவின் ஐஷேர்ஸ் பங்குகளை வீழ்த்தி இந்தியா 5.52 சதவீதம் சந்தை பங்குகளை உயர்த்தியுள்ளது. பிரதமர் மோடியின் கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் ஐஷேர்ஸ் எஸ் மற்றும் பி இந்தியா 5.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சீன அரசின் பங்குகள் 4.79 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Country risk monitoring agency Aon, says India remains a relative bright spot in the region. The government is moving towards implementing much-needed reforms and focusing on infrastructure in the current budget. These economic improvements offset the continued high level of political violence. China’s tightening policy is set to be a strain on growth internally and abroad said Aon.
Please Wait while comments are loading...