ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார்.. என்னிடம் ஆதாரம் இருக்கிறது.. மனைவி பரபரப்பு புகார்
ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார் என்று அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார் என்று அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
முதலில் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். அதன்பின் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார்.
இவர் சூதாட்டம் செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இவர் மீது போலீசில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

ஆபாசம்
ஷமி நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி கூறினார். ஷமி செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். முகமது ஷமி தன்னை பலமுறை அவமானப்படுத்தி இருப்பதாக இவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

சூதாட்டம்
இந்த நிலையில் ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவரது மனைவி கூறியுள்ளார். பாகிஸ்தான் பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் அவர்கள் மூலமாக ஷமி சூதாட்டம் செய்தார் என்றும் கூறியுள்ளார். ஷமி என்னை ஏமாற்றினார், அவருக்கு இந்த நாட்டை ஏமாற்றுவது ஒன்னும் சிரமமான காரியம் இல்லை என்று அவர் அவர் மனைவி குறிப்பிட்டு இருக்கிறார்.

பாகிஸ்தானி
இதற்காக அவர் அலீஷ்பா என்ற பாகிஸ்தான் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லியுள்ளார். முகமது பாய் என்ற சூதாட்டக்காரர் அலீஷ்பா மூலம் ஷமியிடம் பணம் கொடுப்பார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பிரச்சனை கடந்த 3 வருடங்களாகவே நடந்து வந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.

போலீசில் புகார்
தற்போது ஷமியின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னை கொடுமைப்படுத்தியது, கொலை முயற்சி செய்தது ஆகிய பிரிவுகளில் கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஷமி எப்போது வேண்டுமானாலும் விசாரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications