For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அந்த' சுற்றுலாவில் அதகளம் செய்யும் பத்து நாடுகளின் பட்டியல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் எங்குமே செக்ஸ் டூரிசம் என்ற பெயரில் பெண்கள் மற்றும் ஆண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. பல நாட்டு சுற்றுலா பயணிகளும் ஒவ்வொரு நாட்டுக்கு செல்லும்போதும் அங்குள்ள உணவு பொருட்களை ருசி பார்ப்பது வழக்கம். அதேபோல அந்தந்த நாட்டு பெண்களையும் உறவு கொண்டு அனுபவத்தை பெறுகிறார்கள் பல சுற்றுலா பயணிகள். இதற்கு செக்ஸ் டூரிசம் என்று பெயரிட்டு அதை சார்ந்த சுற்றுலாவையும் வளர்த்து, கல்லா கட்டுகிறது பல நாடுகள். உலகில் இதுபோன்ற சுற்றுலாவில் முன்னணியில் இருக்கும் பத்து நாடுகளின் பட்டியல் இதோ...

பிரேசில்

பிரேசில்

உலக கோப்பையை முன்னிட்டு பல நாடுகளில் இருந்தும் வந்து விபச்சாரிகள் குவிந்த நாடாயிற்றே பிரேசில். இங்கு ஆண்களுக்கு, பெண்கள் சரி நிகர் சமானம். ஆம்.. பெண் சுற்றுலா பயணிகள், ஆண் விபச்சார அழகன்களை தேடிபோய் பயண களைப்பை போக்கிக்கொள்ளவும் இந்த நாட்டில் வசதியுள்ளது. பெண் அழகிகளை போலன்றி, ஆண்கள் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவையாற்றுவார்களாம். "வாங்க.. வாங்க.. போனா வராது.. பொழுதுபோனா கிடைக்காது.." என்று பிரேசில் தெருக்களில் ஆண்களும், பெண்களும் தங்களுக்கான வாடிக்கையாளர்களை கூவி அழைப்பது இங்கு சகஜம்.

கம்போடியா

கம்போடியா

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் விபச்சாரத்துக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், இங்கு விபச்சாரம் நடக்கத்தான் செய்கிறது. அதிலும் குழந்தைகள் பலவும் இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வறுமை காரணமாக பெற்றோர்களே தங்களது மகள்களை விபச்சார கும்பலிடம் விற்பனை செய்வது இந்த நாட்டில் அதிகம். கன்னித்தன்மையுடன் இருக்கும் இளம் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் கம்போரியா 'செக்ஸ் மார்க்கெட்டில்' விலை அதிகமாம். இதற்காக கன்னித்தன்மை உள்ள பெண்களை நிறுத்தி ஏலம் விட்டு அதிக தொகைக்கு கேட்பவர்களுக்கு பெண்கள் கைமாற்றி விடப்படும் கொடுமை இங்கு சாமானியம்.

நெதர்லாந்து

நெதர்லாந்து

ஐரோப்பியாவின் வளர்ந்த நாடான நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் பலான தொழிலில் பலே இடத்தில் உள்ளது. விபச்சாரம் சட்டப்பூர்வம் என்பதோடு, ஆம்ஸ்டர்டாம் நகரில் 'சிகப்பு விளக்கு மாவட்டம்' என்ற பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது. உறவுக்காக வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பிற சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்லலாம். செக்ஸ் தொடர்பான பொருட்கள் வாங்கும் கடைகள், ஆடை அவிழ்த்து நடனமாடும் கிளப்புகள், கண்ணாடி கூண்டுகளுக்கு பின்புறம் சிக்கென்ற ஆடையில் உடலை காண்பித்தபடி நிற்கும் பெண்கள் என, பிற சுற்றுலா பயணிகளின் 'கண்களுக்கும், கருத்துக்கும்' ஈர்ப்பளிக்கும் விஷயங்கள் இங்கு ஏராளம், தாராளம். ஆண்களின் வயது, நேரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஒரு பெண்ணுக்கான வாடகை 35 முதல் 100 யூரோக்கள் வரையாம்.

கென்யா

கென்யா

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் செக்ஸ் டூரிசம்தான் நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பு. ஆனால் படிக்காத, பாமர மக்கள் அதிகம் வாழும் அந்த தேசத்தில் பாலியல் நோய்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை. 60 சதவீதம் பேர்தான் ஆணுறை பயன்படுத்தி விபச்சாரிகளிடம் உடலுறவு கொள்வதாக புள்ளிவிவரம் கூறுகிறது. ஒரே நாளில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆண்களை திருப்தி செய்யும் நிலையில் அங்குள்ள விபச்சார பெண்கள் உள்ளனர். இதுபோன்ற காரணத்தால் எய்ட்ஸ் அபாயம் அதிகம். இருப்பினும் பணம் கிடைக்கிறதே என்று அரசாங்கம் கண்ணை மூடி உட்கார்ந்திருக்கிறது.

பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ்

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் விபச்சாரம் கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், ஐந்து லட்சம் விபச்சாரிகளை கொண்ட நாடாக விளங்குகிறது. பார்களில் வேலை பார்த்துக்கொண்டே 'பார்ட் டைமாக' ஆடை அவிழ்க்கும் பெண்கள் அங்கு அதிகம். சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள், மேலை நாடுகளின் வாடிக்கையாளர்கள் இவர்களுக்கு அதிகம் உள்ளனர். பிலிப்பைன்ஸ் வரும் சுமார் 50 சதவீத சுற்றுலா பயணிகள் செக்ஸ் டூரிசத்துக்காகவே வருகிறார்களாம்.

கொலம்பியா

கொலம்பியா

போதை மருந்துகளின் பிரதேசமான தென் அமெரிக்க நாடான கொலம்பியா, செக்ஸ் டூரிசத்தில் மட்டும் சளைத்ததா என்ன? இங்குள்ள விபச்சார பெண்கள் காசு விஷயத்தில் ரொம்ப கறாரெல்லாம் கிடையாதுங்க. காய்கறியை பேரம் பேசி வாங்கத்தெரிந்தவர் யாராவது அங்கு சென்றால் சவுரியமான ரேட்டுக்கு பேரத்தை முடித்துவிடலாமாம். சாலையோரங்களில் நின்றபடி "போதும்.. போதும்.. உனக்கு இந்த ரேட் போதும்" என வாடிக்கையாளர்கள் கூறும் சத்தம் அக்கம்பக்கத்திலும் கேட்கும்.

இந்தோனேஷியா

இந்தோனேஷியா

இந்தோனேஷியாவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செக்ஸ் டூரிசத்துக்கு பெயர்போன ஒரு நாடாகும். சட்டவிரோதம் என்றபோதிலும், சமூக வலைத்தளங்கள் மூலமாக விபச்சார பெண்கள் வாடிக்கையாளர்களை கவருவதும் இங்குதான் நடக்கிறது. ஆன்லைன் புக்கிங் வசதியும் உண்டாம்.

ஸ்பெயின்

ஸ்பெயின்

ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் இபிசா, மேட்ரிட் மற்றும் பார்சிலோனா நகரங்களிலுள்ள இரவு நேர கிளப்புகள் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது போதாதென்று, இப்போது செக்ஸ் டூரிசமும் அங்கு களை கட்டுகிறது. ஐரோப்பாவின் டாப் விபச்சார பகுதி என்றால் அது ஸ்பெயின்தான். அந்த நாட்டு பெண்களைவிட, அடிமைகளாக வந்த தென் அமெரிக்க நாட்டு பெண்கள்தான் விபச்சாரத்தில் அதிகம் ஈடுபடுகிறார்கள்.

டொமினிக்கன் குடியரசு

டொமினிக்கன் குடியரசு

கரீபியன் நாடுகளில் பலவும் செக்ஸ் சுற்றுலாவில் முக்கிய பங்கு வகித்தாலும், டொமினிக்கன் குடியரசு நாடு இதில் முன்னிலையில் உள்ளது. இந்த குட்டி நாட்டில், 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பெண்கள் வாடிக்கையாளர்களுக்காக காத்திருப்பதாக கூறுகிறது புள்ளி விவரம். இந்நாட்டில் வயது குறைந்த சிறுவர், சிறுமிகள் செக்ஸ் வைத்துக்கொள்வதும் சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலான செக்ஸ் தொழிலாளிகள் பதின்ம வயதுடையவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து எளிதாக வந்தடையும் இடத்தில் நாடு அமைந்துள்ளதால் செக்ஸ் சுற்றுலா இங்கு கொடி கட்டி பறக்கிறது.

தாய்லாந்து

தாய்லாந்து

இந்த பட்டியலில் உலக கேளிக்கைகளின் தலைநகரமான தாய்லாந்து நாடு இல்லாமல் போகுமா என்ன.. இங்கு 30 லட்சம் பெண்கள், விபச்சார தொழிலை செய்கிறார்கள். இந்த நாட்டில் விபச்சாரம் கலாசாரத்தின் ஒரு அங்கமாகவே உள்ளதாகவும், டீ, காபி குடிப்பதை போல அந்த நாட்டு பெண்களுக்கு அது ஒரு பெரிய குற்றமாக தெரிவதில்லை என்று வர்ணிக்கின்றன சுற்றுலா தொடர்பான பல புத்தகங்கள்.

English summary
Sex tourism, in which the main goal of a trip is to engage in sexual activity, often with prostitutes, is a booming global industry. Most clients involved in sex tourism are men, while a majority of the sex workers are women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X