For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"மன்ச் சாக்லேட்"டை மாலையாக அணிவித்து முருகனை வணங்கும் கேரளத்துக் கோவில்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ரோஜா மாலை, மல்லிகைப் பூ மாலை அணிவித்து கடவுளை வழிபடுவார்கள். ஆனால் கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் மஞ்ச் சாக்லேட் அணிவித்து முருகனை வழிபடுகின்றனர் பக்தர்கள்.

ஆக்சன்... ரியாக்சன்... மஞ்ச்பிகேசன் என்பதுபோல பாலமுருகனுக்கு மஞ்ச் சாக்லேட் மாலையைப் போடுகின்றனர்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தேக்கன் பழனி பாலசுப்ரமணிய கோயில்தான் சாக்லேட் பிரியர்கள் செல்ல வேண்டிய கோயிலாக விளங்குகிறது.

மஞ்ச் முருகன் கோவில்

இங்குள்ள முருகனை வழிபட வரும் பக்தர்கள் விதவிதமான சாக்லேட்டுகளை கொண்டு வந்து நைவேதனம் செய்கிறார்கள். அதில் பிரபலமானது மஞ்ச் சாக்லேட். எனவேதான் இந்த முருகன் கோயில் இருக்கும் பகுதியில், மஞ்ச் முருகன் என்றே இறைவன் அழைக்கப்படுகிறார்.

சாக்லேட் பிரசாதம்

பக்தர்கள் முருகனுக்கு அளிக்கும் சாக்லேட்டுகள், கோயில் பிரசாதமாக, அங்கு வருவோருக்கு அளிக்கப்படுகிறது.எந்த வேறுபாடும் இன்றி, இங்கு வரும் அனைவருமே சாக்லேட்டுகள் வாங்கி வந்து முருகனின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.

குழந்தைகள் அதிகம்

இந்த கோயிலைப் பொருத்தவரை, பெரியவர்களை விட, குழந்தைகள்தான் அதிகமாக வருகின்றனர். எனினும், இந்த கோயிலில், சாக்லேட் வைத்து வழிபடும் முறை எவ்வாறு, எப்போது வந்தது என்பது குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை.

பாலமுருகனுக்கு சாக்லேட்

பால முருகன் என்றால், குழந்தை என்பதால், அவருக்கு சாக்லேட் பிடிக்கும் என்று யாரேனும் கோயிலுக்கு சாக்லேட் வாங்கி வந்திருக்கலாம். அதுவே நாளடைவில் இக்கோயிலுக்கு வரும் மற்ற பக்தர்களால் பின்பற்றப்பட்டிருக்கலாம் என்கின்றனர் கோவில் நிர்வாகிகள்.

English summary
Balamurugan (literally baby Murugan, who is Shiva’s son), of the Chemmoth Sree Subramaniya Swami Temple, is said to have become fond of chocolate after a little boy offered it to him some years ago. But maybe it’s an assumption to say that he become fond of chocolates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X