For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னய்யா சொல்கிறீர்கள்...நாட்டில் கொலைகள் குறைஞ்சுருச்சா?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 1960களை விட தற்போது கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

தேசிய குற்றவியல் விசாரணை அமைப்பின் ஆண்டு விவர வெளியீட்டில், இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,2014 ஆம் ஆண்டினைப் பொறுத்த வரையில் நாட்டில் 33,981 கொலைகளும், 3,332 கொலைக்கு உடந்தையாக இருந்த வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு குற்றங்களும் இணைந்து 2014 ஆம் ஆண்டிற்கு 3.0% மக்கள் தொகை அளவிற்கு மட்டுமே பதிவாகியுள்ளன. முந்தைய வருடங்களில் 2.98ஆக உள்ளது.

குறையும் கொலைக்குற்றங்கள்:

குறையும் கொலைக்குற்றங்கள்:

மிகக் குறைந்த அளவாக 1970 ஆம் ஆண்டில் 16180 கொலைக் குற்றங்களும், 2,357 கொலைக்கு உடந்தை குற்றங்களும் பதிவாகியுள்ளன. 60 களில் அதிகமாகிய இந்த குற்றங்கள் 1992ல் அதிகரித்து காணப்பட்டுள்ளன.

1992ல் அதிகமாம்:

1992ல் அதிகமாம்:

1992ல் கிட்டதட்ட 5.15 சதவீதமாக இருந்துள்ளது. அது 1957 ஆம் வருடத்தினை விட இரண்டு மடங்காகும். எனினும், 1992 க்கு பின்னர் இந்த கொலைக் குற்ற அளவுகள் குறைய ஆரம்பித்துள்ளது.

மாநிலங்களில் குறைவு:

மாநிலங்களில் குறைவு:

ஆந்திரா, தெலுங்கானா, ஜார்க்கண்ட், உத்திர பிரதேசம், உத்திர காண்ட், மத்திய பிரதேசம், சட்டீஸ்கரிலும் 1992 ஆம் ஆண்டினை விட 2014 ஆம் ஆண்டில் குற்ற அளவு பெரிதளவில் குறைந்துள்ளது.

உண்மையிலேயே மகிழ்ச்சிதான்:

உண்மையிலேயே மகிழ்ச்சிதான்:

கடந்த இரு நூற்றாண்டுகளில், நாட்டில் எல்லா மாநிலங்களிலும் மக்கள் தொகை பல கோடியாக அதிகரித்துள்ளது. எனினும், கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

ஏன் அதிகரித்தது.. ஏன் குறைந்தது

ஏன் அதிகரித்தது.. ஏன் குறைந்தது

எனினும், 1992களில் ஏன் கொலைகள் அதிகரித்தது, பின்னர் ஏன் குறைந்துள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளதாக இந்த ஆய்வு கூறியுள்ளது. ஆனாலும், கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளது பெரும் மகிழ்ச்சியினை தருவதாக உள்ளது.

English summary
Believe it or not, the murder rate in India in the past few years has been at its lowest level since the 1960s. Even the absolute number of murders in 2014 was lower than in 1992, the year when the murder rate (number of murders per lakh of population) was at its highest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X