For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதையும் எதிர்பார்க்க கூடாது.. எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும்.. அர்ஷ்தீப் சொன்ன தத்துவம்!

வாழ்க்கையின் மந்திரம் குறித்து பஞ்சாப் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

மொஹாலி: எதையும் எதிர்பார்க்காமல் எல்லாவற்றுக்கும் தயாராக இருப்பதே எனது வாழ்க்கை மந்திரம் என்று பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கிண்டல்களும், கேலிகளும் தொடங்கியுள்ளன. வழக்கம் போல் பஞ்சாப் அணிதான் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இம்முறை வேறு மாதிரி உருமாறி வந்து நிற்கிறது பஞ்சாப் அணி. அனைத்து அணிகளுக்கும் முன்னதாக பயிற்சியை தொடங்கிய பஞ்சாப் அணியில், காயம்பட்ட சிங்கமான ஷிகர் தவான் கேப்டன்சியை ஏற்றுள்ளார்.

மும்பை வெற்றி இவர்கள் 2 பேர் கையில்தான்.. ஹர்பஜன் சிங் சொன்ன விஷயம்.. யார் அந்த 2 பேர்? மும்பை வெற்றி இவர்கள் 2 பேர் கையில்தான்.. ஹர்பஜன் சிங் சொன்ன விஷயம்.. யார் அந்த 2 பேர்?

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கேப்டன், ஒரு பயிற்சியாளருடன் வலம் வந்தாலும், இம்முறை வழக்கத்திற்கு மாறாக அதிக பாசிட்டிவிட்டியை வெளிப்படுத்தி வருகிறது. அதுதான் பஞ்சாப் அணியின் சீக்ரெட்டாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஷிகர் தென்னாப்பிரிக்காவின் ரபாடா, இங்கிலாந்து அணியின் சாம் கரண், தீபக் சஹர், லிவிங்ஸ்டன் ஆகியோருடன் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான அர்ஷ்தீப் சிங்கும் இருப்பதால், இம்முறை பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஷ்தீப் சிங்கின் சாதனை

அர்ஷ்தீப் சிங்கின் சாதனை

இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்காக அர்ஷ்தீப் சிங் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த இரு ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய அணிக்காக அறிமுகமாகி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரே இடதுகை பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மட்டும் தான். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 18 விக்கெட்டுகளை 8.27 எகானமியில் வீழ்த்தி அசத்திய அர்ஷ்தீப், கடந்த ஆண்டு 10 விக்கெட்டுகளை 7.7 எகானமியில் வீழ்த்திக் காட்டினார். அதிலும் டெத் ஓவர்களில் அர்ஷ்தீப் சிங்கின் யார்க்கர்கள் எதிரணிகளை அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கின.

என் மந்திரம் இதுதான்

என் மந்திரம் இதுதான்

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் கூறுகையில், எதையும் எதிர்பார்க்காமல், எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். இதுதான் என் வாழ்க்கையின் மந்திரம். கடந்த இரு ஐபிஎல் தொடர், என் மனநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளன. என் திறமை மீது நம்பிக்கை வந்துள்ளது. எனது பயிற்சிக்கான முடிவுகளை கண்முன் பார்க்கும் போது, என் தன்னம்பிக்கை கூடிக் கொண்டே செல்கிறது.

இங்கிலாந்து செல்லும் அர்ஷ்தீப் சிங்

இங்கிலாந்து செல்லும் அர்ஷ்தீப் சிங்

அதிலும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடும் போது எனது ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டே வந்துள்ளேன். அதேபோல் ஐபிஎல், உள்ளூர் போட்டிகள், உலகக்கோப்பை என எந்தப் போட்டியாக இருந்தாலும், வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் விளையாட வேண்டும். இதுவரை என் வாழ்க்கையில் 7 ரஞ்சி டிராபி போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தாலும், இங்கிலாந்தின் கென்ட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று தெரிவித்தார்.

English summary
Punjab star player Arshdeep Singh has said that my life mantra is to be ready for everything without expecting anything.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X