ரூ2,000 கோடி சொத்து அபகரிப்பு- சோனியா, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு என்ன?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸ் கட்சியினர் இப்போது அமலாக்கத்துறைக்கு எதிரான போராட்டங்களை நாடு முழுவதும் தீவிரமாக நடத்தி வருகின்றனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்துதான் நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சோனியா, ராகுல் காந்திக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வரும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி என்ன?
- நேஷனல் ஹெரால்டு பத்திரிகையானது ஜவஹர்லால் நேருவால் 1938-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பத்திரிகையானது1937-ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (Associated Journals Limited AJL) என்ற நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.
- AJL நிறுவனத்தில் 5,000க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர்.
- AJL நிறுவனமானது, குவாமி ஆவாஸ் Qaumi Awaz உருது மொழி பத்திரிகையையும் நடத்தியது.
- அதேபோல நவ்ஜீவன் என்ற இந்தி நாளேட்டையும் நடத்தியது.
- நாட்டு விடுதலைக்கான குரலை வெளிப்படுத்திய நேஷனல் ஹெரால்டு பத்திரிகை 1942-ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டது.
- 3 ஆண்டுகளுக்குப் பின்னர் 1945-ம் ஆண்டு முதல் மீண்டும் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வெளியாக தொடங்கியது.
- 1947-ல் நாடு விடுதலை அடைந்து நாட்டின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். இதனால் நேஷனல் ஹெரால்டு இயக்குநர் குழு தலைவர் பதவியை நேரு ராஜினாமா செய்தார்.
- காங்கிரஸ் கட்சியின் நிதி ஆதாரத்தில் வெளிவந்த இந்த நேஷனல் ஹெரால்டு பத்திரிகை 2008-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அப்போது, பொருளாதார நெருக்கடி ஒரு காரணமாக கூறப்பட்டது.
- நேஷனல் ஹெரால்டு பத்திரிகை 2016-ம் ஆண்டு முதல் ஆன்லைன் எடிசனாக மட்டும் வந்து கொண்டிருக்கிறது.
- 2008-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்ட போது ALJ நிறுவனத்துக்கு ரூ90 கோடி கடன் இருந்தது.
- 2010-ம் ஆண்டு யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் (Young Indian Limited- YIL ) என்ற நிறுவனத்துக்கு ALJ நிறுவனத்தின் பங்குகள் கைமாறின. ALJ நிறுவனம் கடன்களில் இருந்து விடுபட்டது. யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோரை உறுப்பினராகக் கொண்டது. இந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சியின் நிதி கடனாக கொடுக்கப்பட்டது. இந்த கடன் மூலம் ALJ நிறுவனம், யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் வசமானது. ALJ நிறுவனத்தின் 99% பங்குகளை சோனியா- ராகுல் காந்தியின் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கைப்பற்றியது.
- காங்கிரஸ் கட்சியை பயன்படுத்தி ALJ நிறுவனத்துக்கு சொந்தமான ரூ2,000 கோடி சொத்துகளை தங்களது யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் சோனியாவும் ராகுல் காந்தியும் அபகரித்துக் கொண்டனர் என்பது பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியின் புகார்.
- அதாவது வெறும் ரூ லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட சோனியா-ராகுல் காந்தியின் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ALJ-ன் ரூ2,000 கோடி சொத்துகளை முறைகேடாக கைப்பற்றியது என்பதுதான் வழக்கு..
- சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீதான விசாரணையின் அடிப்படையில் 2013-ம் ஆண்டு சோனியா, ராகுல் காந்திக்கு எதிராக வருமான வரித்துறை விசாரணை நடத்த விசாரணை நீதிமன்றம் அனுமதி அளித்தது. 2015-ம் ஆண்டு விசாரணைகளுக்குப் பின்னர் சோனியா, ராகுல் காந்திக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. ALJ பங்குகளை யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் கைப்பற்றியதில் நிதி மோசடி நடைபெற்றதா? என்பது அமலாக்கத்துறையின் விசாரணை.
- ALJ நிறுவனத்தின் பங்குகள், யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு வர்த்தக அடிப்படையில்தான் கைமாறின.இதில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பது அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு.
- 2023-ம் ஆண்டு ரூ.751.9 கோடி மதிப்பிலான யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
- இந்த வழக்கில்தான் தற்போது சோனியா- ராகுல் காந்திக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை என கூறி காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது.
More From
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications