For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா.. ஓஹோ! ஆர்எஸ்எஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய இந்திய வீரர் ஜடேஜா -ட்விட்டரில் வெச்சு செய்யும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தன்னுடைய மனைவி ரிவாபா ஆர்.எஸ்.எஸ். குறித்து பேசும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஆர்.எஸ்.எஸ். அமைப்பை புகழ்ந்து பதிவிட்டு உள்ளார். இந்த நிலையில் அவரது ட்விட்டர் பதிவின் கீழ் ஏராளமானோர் அவரை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியில் பிரபல ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டி இட்டார்.

அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. தர்மேந்திரசிங் ஜடேஜாவுக்கு சீட் வழங்காத பாஜக ஜடேஜாவுக்கு இருக்கும் செல்வாக்கை நம்பி ரிவாபாவுக்கு வாய்ப்பு அளித்தது.

குடும்பமே எதிர்த்து நின்றது.. மனைவி ரிவபா வென்றதும்.. பணத்தை வீசி ஏறிந்து.. ஜடேஜா செய்த காரியம்! குடும்பமே எதிர்த்து நின்றது.. மனைவி ரிவபா வென்றதும்.. பணத்தை வீசி ஏறிந்து.. ஜடேஜா செய்த காரியம்!

ரசிகர்களுக்கு வேண்டுகோள்

ரசிகர்களுக்கு வேண்டுகோள்

அதை தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதி மக்கள் தனது மனைவிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த வீடியோவில் பேசிய அவர், "டி20 கிரிக்கெட் போட்டியை போன்றது குஜராத் தேர்தல். ஜாம்நகர் மக்களும், அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் அதிகளவில் எனது மனைவிக்காக வாக்களிக்க வேண்டும்." என கூறி இருந்தார்.

விதிமீறல் புகார்

விதிமீறல் புகார்

தற்போது காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வரும் ரவீந்திர ஜடேஜா தனது மனைவியை வெற்றிபெற வைப்பதற்காக பாஜகவுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவரது மனைவி ரிவாபாவுக்கு வாக்களிக்குமாறு வைக்கப்பட்ட பேனரில் ஜடேஜா இந்திய கிரிக்கெட் அணி ஜெர்சியில் இருக்கும் படம் இடம்பெற்றது விமர்சனத்துக்கு உள்ளானது.

விதிமீறல் புகார்

விதிமீறல் புகார்

தற்போது காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வரும் ரவீந்திர ஜடேஜா தனது மனைவியை வெற்றிபெற வைப்பதற்காக பாஜகவுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவரது மனைவி ரிவாபாவுக்கு வாக்களிக்குமாறு வைக்கப்பட்ட பேனரில் ஜடேஜா இந்திய கிரிக்கெட் அணி ஜெர்சியில் இருக்கும் படம் இடம்பெற்றது விமர்சனத்துக்கு உள்ளானது.

பிசிசிஐயிடம் புகார்

பிசிசிஐயிடம் புகார்

இது தொடர்பாக ராஷ்டிரிய லோக் தளம் நிர்வாகி பிரஷாந்த் கனோஜியா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பிசிசிஐ ஒப்பந்தத்தின் அடிப்படையில் எந்த அரசியல் கட்சிக்காகவும் பிரச்சாரம் செய்யக்கூடாது. மீறினால் விளையாட தடை விதிக்கப்படும். இந்திய அணி சீருடையை அணிந்து அரசியல் கட்சிக்கு பிரச்சாரம் செய்கிறார். பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா?" என்று கேள்வி எழுப்பினார்.

ஆர்.எஸ்.எஸ். பற்றி பேசிய ரிவாபா

ஆர்.எஸ்.எஸ். பற்றி பேசிய ரிவாபா

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் தொடக்கத்தில் 3வது இடத்தில் பின் தங்கி இருந்த ரிவாபா, கடைசி நேரத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பாக ரிவாபா அளித்த நேர்காணல் வீடியோவை பதிவிட்டு உள்ள ஜடேஜா, அந்த அமைப்பை புகழ்ந்து உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை புகழ்ந்த ஜடேஜா

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை புகழ்ந்த ஜடேஜா

அதில், "ஆர்.எஸ்.எஸ் பற்றிய உங்கள் புரிதலை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய கலாச்சாரம் மற்றும் நமது சமூகத்தின் மதிப்புகளை நிலைநாட்டும் லட்சியங்களை ஊக்கப்படுத்தும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். உங்கள் அறிவும் கடின உழைப்பும்தான் உங்களை தனித்து நிறுத்தும். பழக்கப்படுத்தியும் மேம்படுத்திக்கொள்ளுங்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார். அவரது பதிவிற்கு கீழ் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஜடேஜாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

English summary
Indian cricketer Ravindra Jadeja has praised the RSS organization in twitter while sharing video of his wife Rivaba Jadeja
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X