For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூஸ் 18 டிவியும் சொல்லிருச்சு... மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனாவுக்கு அமோக வெற்றி!

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Maharashtra, Haryana Assembly, and 51 by-poll seats go for voting today

    டெல்லி: நியூஸ் 18 மற்றும் இப்சோஸ் இணைந்து நடத்திய எக்சிட் போல் முடிவும் பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளது. அதாவது இவர்கள் கணிப்புப் படியும் பாஜக கூட்டணிதான் மகாராஷ்டிராவை மீண்டும் வெல்லுமாம்.

    88 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்டது மகாராஷ்டிரா மாநிலம். இப்போது இங்கு பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று நடந்த இடைத்தேர்தலில், ஆளும் பாஜக - சிவசேனா ஒரு அணி, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சியாக ஒரு அணி.. என்று மோதின.

    மகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை! ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்புமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை! ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு

    வாக்குபதிவு

    வாக்குபதிவு

    மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபைகளுக்கு இன்று நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளன. இந்த மாநிலங்கள் தவிர தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநிலங்களில் சட்டசபை இடைத் தேர்தலும் நடைபெற்றது. இதன் வாக்குப் பதிவு இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. காரணம் பாஜக தற்போது ஆட்சியில் உள்ள மாநிலம் இது. அதேபோல ஹரியானாவிலும் பாஜகதான் ஆட்சியில் உள்ளது. இங்கு யார் மீண்டும் வெல்வார்கள் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டது.

    கருத்துக் கணிப்பு

    கருத்துக் கணிப்பு

    முன்னதாக, இந்த தேர்தலில் பாஜக அணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிய வந்த நிலையில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை பல்வேறு டிவி செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்டி இப்போது எக்சிட் போல் முடிவுகள் வர ஆரம்பித்து விட்டன. பாஜகவே மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதாக பெரும்பாலான முடிவுகள் சொல்லி வருகின்றன.

    நியூஸ் 18

    நியூஸ் 18

    நியூஸ் 18 மற்றும் இப்சோஸ் இணைந்து ஒரு எக்சிட் போலை நடத்தின. அதன் முடிவில் பாஜக - சிவசேனா கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது இக்கூட்டணிக்கு மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 243 தொகுதிகள் கிடைக்குமாம். இது மிகப் பெரிய வெற்றியாகும்.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    காங்கிரஸ் கூட்டணி பரிதாபமான நிலையில் உள்ளது. அக்கூட்டணிக்கு 41 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஒரு காலத்தில் மகாராஷ்டிராவில் கோலோச்சிய காங்கிரஸ் இன்னும் தேறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

    சிவசேனா

    சிவசேனா

    மற்ற கட்சிகளுக்குப் போனால் போகிறதென 4 இடங்கள் வரை கிடைக்கும் என்று இந்த எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் தலைமையிலான அரசு மீது பெரிய அளவில் மக்களிடையே அதிருப்தி இல்லை. மேலும் சிவசேனாவும் கடைசி நேரத்தில் இணக்கமான கூட்டணியை அமைத்த காரணத்தால் பெரு வெற்றி கிடைக்கும் சூழல் எழுந்துள்ளது.

    English summary
    maharashtra election exit polls: news18 exit polls says that the BJP seems to be back in Maharashtra
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X