இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

பாரடைஸ் பேப்பர்ஸ் விவகாரத்திலும் அடிபடுகிறது 2ஜி புகழ், நீரா ராடியா பெயர்!

By Mohan Prabhaharan
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  டெல்லி : வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் சொத்து சேர்த்த பிரபலங்களின் பெயர் பட்டியல் அடங்கிய 'பாரடைஸ் பேப்பர்ஸ்' என்கிற ரகசிய அறிக்கையை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ளது.

  மொத்தம் 180 நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆப்பிள்பை என்கிற நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அந்தந்த நாட்டின் சட்டங்களின் ஓட்டைகளின் மூலம் வரி ஏய்ப்பு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டித்தரும் பணியைச் செய்து வந்தது.

  Nira Radia on 2g scam now also get pointed in Paradise papers issue

  இந்தியாவில் இருந்து இந்த பாரடைஸ் பேப்பர்ஸ் பட்டியலில் 714 பிரபலங்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். அரசியல், சினிமா, நிறுவன முதலாளிகள் என பலரும் இதில் அடக்கம். இதில் முக்கியப் புள்ளி 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீரா ராடியா.

  2ஜி வழக்கின் போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டு ஊடகங்களில் வெளியானது. அப்போது இந்த விஷயம் மக்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் அரசு ஆட்சியின் போது, சில பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் தனக்கு இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி, மந்திரி சபையை அமைப்பது வரை தலையீடு செய்தார் நீரா ராடியா. தற்போது இந்த பாரடைஸ் பேப்பர்ஸ் விவகாரத்திலும் இவரது பெயர் இடம்பெற்றிருக்கிறது.

  மால்டாவில் 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூஸ் லா வேலட் மற்றும் பெகாசஸ் ஆகிய இரு நிறுவனங்களில் இவரது பெயர் இடம் பெற்றிருக்கிறது. அதில் முக்கியப் பொறுப்புகள் வகித்த இவர் 2014ம் ஆண்டு பதவி விலகி இருக்கிறார். ஆனால், அந்த இரு நிறுவனங்களும் பெயர் மாற்றப்பட்டு இயங்கி வந்திருப்பது புலனாய்வு விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

  இதுகுறித்த விசாரணையில், 'தகவல் தொடர்பு வியாபாரங்களைத் தொடர்ந்து, மால்டா நாட்டில் பதிவு செய்யப்பட்ட கம்பெனியான பெகாசஸ் நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், உடல்நிலை உள்ளிட்ட காரணங்கள் ஒத்துழைக்காததால், அந்த நிறுவன் பொறுப்புகளில் இருந்து நீரா ராடியா விலகினார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுபோல சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பனாமா பேப்பரஸ் என்னும் வரி ஏய்ப்பு விவகாரத்திலும் நீரா ராடியா பெயர் வெளியானது குறிப்பிடத்தக்கது. 2ஜி வழக்கின் தீர்ப்புத் தேதி இன்று வெளியாக உள்ள நிலையில், அதில் முக்கிய பங்கு வகித்த நீரா ராடியாவின் பெயர் பாரடைஸ் பேப்பர் விவகாரத்துலும் வெளியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  2G Scam Nira Radia name is also found in Paradise papers issue. and totally 714 indian celebrities name are men

  வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

  English summary
  2G Scam Nira Radia name is also found in Paradise papers issue. and totally 714 indian celebrities name are mentioned under these offshore dealings paper.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more