For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிர்பயா செய்ததுதான் தவறு... பலாத்காரத்தை தேடிச் செல்வது பெண்கள்தானாம்... டீச்சரின் கேவல பேச்சு

நிர்பயா செய்ததுதான் தவறு என்றும் பெண்கள்தான் பலாத்கார சம்பவங்களை தேடிக் கொள்கின்றனர் என்று சத்திஸ்கரில் பள்ளி ஆசிரியை ஒருவர் இவ்வாறு பாடம் நடத்துகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    டீச்சரின் கேவல பேச்சு- வீடியோ

    ராய்ப்பூர்: நிர்பயா வீட்டிலேயே இருந்திருந்தால் அவருக்கு பாலியல் பலாத்கார சம்பவம் நடந்திருக்காது என்றும் பெண்கள்தான் பலாத்காரத்தை தேடிக் கொள்வது பெண்கள்தான் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பெண்கள் மீதே வாரி தெளித்துள்ளார் சத்தீஸ்கர் மாநில ஆசிரியை.

    ராய்ப்பூரில் உள்ளது கேந்திரிய வித்யாலயா என்ற மத்திய அரசு பள்ளி. இங்கு ஏராளமான மாணவர்களும் மாணவிகளும் கல்வி பயில்கின்றனர். இங்கு உயிரியல் துறை ஆசிரியையாக ஸ்னேலதா சங்கவார் உள்ளார். இருபாலர் பள்ளி என்றும் பாராமல் அசிங்கமாக பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    ஒருநாள் அவர் வகுப்பில் பேசியதை யாரோ ரெக்கார்டு செய்து அதை பள்ளி முதல்வரிடம் போட்டு காண்பித்துள்ளனர். அதை கேட்ட முதல்வருக்கும், பெற்றோருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

    பெற்றோர் புகார்

    பெற்றோர் புகார்

    இதையடுத்து வகுப்பில் தரக்குறைவாக பேசியதாக அந்த ஆசிரியை மீது பள்ளி முதல்வர் பகவான் தாஸும், பெற்றோரும் புகார் அளித்துள்ளனர். அப்படி என்னதான் அந்த ஆடியோவில் அவர் பேசியுள்ளார் என்று பார்த்தபோதுதான் தெரிந்தது இவர் எத்தகைய அளவு கேவலமாக பேசியுள்ளார் என்பது.

    பலாத்காரம் செய்பவர்கள் மீது தவறில்லையாம்

    பலாத்காரம் செய்பவர்கள் மீது தவறில்லையாம்

    அந்த ஆடியோவில் டீச்சர் பேசுகையில், பெண்கள் தங்கள் உடலை வெளிப்படுத்தும் கேவலமான ஆடைகள் மூலம் ஆண்களின் கவனத்தை ஈர்த்து பலாத்காரம் செய்ய தூண்டுகின்றனர். அதுபோல் ஜீன்ஸ் அணிந்து கொண்டும் லிப்ஸ்டிக் போட்டு கொண்டு வரும் பெண்களும் வெட்கமே இல்லாமல் ஆண்களை அழைக்கின்றனர். அதோடு இரவு 8.30 மணிக்கு கூட பிளஸ் 1 மாணவிகள் தெருக்களில் சுற்றிக் கொண்டிருப்பதை காணமுடிகிறது. அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு நான் கண்டித்தேன்.

    நிர்பயா வழக்கு

    நிர்பயா வழக்கு

    கடந்த 2012-ஆம் ஆண்டு ஆண் நண்பருடன் டெல்லியில் பயணம் செய்த நிர்பயா வழக்கில் நடந்தது என்ன. அவர் என்ன நடந்தது. அவர் இரவு நேரத்தில் சென்றது அவரது கணவருடனா என்ன. யாரோ ஆண் நண்பருடன் சென்றுள்ளார். அந்த வழக்கில் அவர் வீட்டிலேயே இருந்திருந்தால் அது நடந்திருக்குமா. அவரை பலாத்காரம் செய்த ஆண்கள் மீது எந்த தவறும் இல்லை. ஒரு மனிதனின் பாதுகாப்பு அவருடைய கையில்தான் உள்ளது.

    பெற்றோர்கள் கற்பித்தனரா

    பெற்றோர்கள் கற்பித்தனரா

    நிர்பயா வழக்கில் நீதிவேண்டும் என்று அவரது பெற்றோர் விரும்பினர். அதன் படி அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அவரது பெற்றோர்களால் அந்த பெண்ணை கட்டுப்படுத்த முடியுமா என்றல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பெண்கள் மீது குறையா

    பெண்கள் மீது குறையா

    டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் நண்பருடன் பயணம் செய்த நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் மிக கொடூரமாக பலாத்காரம் செய்து பின்னர் அவர் உயிரிழந்தது இந்த நாட்டையே உலுக்கிய சம்பவமாகும். குற்றவாளிகளை கொலை செய்ய வேண்டும் என்று பெரும்பாலான பெண்களே வெறியோடு இருந்தனர். பெண்களின் பலவீனத்தை பயன்படுத்தி அவர்களை பலாத்காரம் செய்யும் சம்பவங்களையும் நிர்பயா வழக்கில் அவருக்கு எதிராக ஆசிரியை பேசுவதையும் எப்படி அவரால் நியாயப்படுத்த முடிகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    A biology teacher in Chhattisgarh accused women of inviting rapes and molestation through revealing attire and blamed the young woman in the Nirbhaya gangrape case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X